districts

img

மோட்டார் வாகன சங்க புதிய கிளை திறப்பு

சென்னை பெருநகர மோட்டார் வாகன சங்கத்தின் புதிய கிளை துவக்க விழா மாதவரம் வேலம்மாள் பள்ளி அருகே டி.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் வி.குப்புசாமி சங்க கொடியை ஏற்றி வைத்தார். பெயர் பலகையை சிஐடியு நிர்வாகி வி.கமலநாதன் திறந்து வைத்தார். கிளையின் தலைவராக டி.விஜயகிருஷ்ணன், செயலாளராக ஜெய்சீலன், பொருளாளராக கார்த்திக் உள்ளிட்ட 13 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாவட்ட பொருளாளர் டி.ஜெ.கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் இ.சேட்டு, சங்கீதா பாபு, இ.ஏழுமலை, ஜெ.டில்லிபாபு ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.