districts

img

மொபைல் டேப்லெட் சாதனங்களால் குழந்தைகளுக்கு கண் பாதிக்கப்படலாம்

சென்னை, டிச.23- மொபைல் போன், டெப்லெட் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை குழந்தைகள் அதிக நேரம் பயன்படுத்தும்போது மையோ பியா என்றழைக்கப்படும் கிட்டப்பார்வை பாதிப்பு ஏற்படும் என்ற கண் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். சென்னையில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஜன.4 ஆம் தேதி இதற்கான சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் 15வயதுகுட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் பங்கேற்கலாம். அதற்காக        https://www.dragarwal.com/myopia-patient-summit/ என்ற இணையதளத்தில் அல்லது 95949 01868 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பெயர் பதிவு செய்துகொள்ளவேண்டும்.   தொலைக்காட்சி, கணினி, மொபைல் சாதன திரைகள் உட்பட, பல்வேறு திரை கள் ஆதிக்கம் செலுத்தும் இன்றைய உலகில் கண் ஆரோக்கியத்தில் தற்போது எதிர்கொள்ள வேண்டியிருக்கின்ற சவால்களை இம்மாநாடு விவாதிக்க உள்ளது.  நீண்ட நேரமாக டிஜிட்டல் திரையை பயன்படுத்தும் நபர்கள், தகவல் தொழில்நுட்பத்துறை பணியாளர்கள், கிட்டப்பார்வை பாதிப்புள்ள நோயாளிகள் மற்றும் அவர்களைப் பராமரிப்பவர்கள் ஆகியோருக்கு நடைமுறை சாத்தியமுள்ள தீர்வுகளை இம்மாநாடு வழங்கும் என்று  டாக்டர் கலாதேவி சதிஷ் தெரிவித்தார்.   கிட்டப்பார்வை மற்றும் டிஜிட்டல் கண்ணயற்சி ஆகியவற்றை சமாளிப்ப தற்கான உத்திகள் குறித்தும் கண் சிகிச்சையில் நிகழ்ந்துள்ள முன்னேற்றங்கள் குறித்தும் பிரபல கண் மருத்துவ நிபு ணர்கள் இதில் சிறப்புரையாற்ற உள்ளதாக தலைமை மருத்துவர் அஷ்வின் அகர்வால் கூறினார்.  பார்வைக்கோளாறுகள் இருக்கிறதா என்று கண்டறிய தொடக்கநிலை சோதனைகள் செய்யப்படும் என்று மருத்துவமனையின் மண்டல தலைவர் டாக்டர் சௌந்தரி தெரிவித்தார்.