districts

img

குமுதம் பக்க வடிவமைப்பாளர் அப்பணசாமி மறைவு

சென்னை, டிச.23- சென்னை பத்திரிகையாளர் மன்ற உறுப்பினரும், குமுதம் வார இதழ் லேஅவுட் ஆர்டிஸ்டுமான  அப்பண சாமி (55) இயற்கை எய்தினார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக் குளத்தைச் சேர்ந்த அப்பணசாமி 1998இல் லே அவுட் கலைஞராக குங்குமம் வார இதழில் தனது பணியைத் தொடங்கினார். பின்னர் 2006 இல் குமுதம் வார இதழில் லே அவுட் ஆர்ட்டிஸ்டாக சேர்ந்து தற்போது வரை பணியாற்றி வந்துள்ளார். கடந்த 8 மாதமாக சிறுநீரகக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தவர்,  திங்களன்று (டிச.23.) காலை சிகிச்சை பலனின்றி சென்னை கேஎம்சி அரசு மருத்துவ மனையில் உயிரிழந்தார். சென்னை பெரம்பூரில் வசித்து வந்த இவருக்கு மனைவி, இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மறைவால் வாடும் அவரின் குடும்பத்திற்கு சென்னை பத்திரி கையாளர்சங்கம், சென்னை பத்திரிக்கையாளர் மன்றம், தமிழ்நாடு யூனியன் ஆப்.ஜெர்னலிஸ்ட் ஆகிய அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளன.