திருவள்ளூர், நவ. 8- கும்மிடிப்பூண்டி பஜாரில் சிறு கடை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டி பஜார் சாலையோரத்தில் இரண்டு பக்கங்களிலும் சிறுகடை வியாபாரிகள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வியா பாரம் செய்து வருகின்றனர். இதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு தான் குடும்பத்தை நடத்தி வரு கின்றனர். போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுவதற்கு பல்வேறு கார ணங்கள் இருந்தாலும், சாலையோர வியா பாரிகள் தான் காரணம் என்று சொல்லி, கடைகள் அனைத்தும் சனிக்கிழமை யன்று, அகற்றப்படும் என நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் எங்கு தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் சிறு வியா பாரிகள் கவலை கொண்டுள்ளனர். இதனிடையே வெள்ளியன்று (நவ 8), காலை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பி னர் டி.ஜெ.கோவிந்தராஜனை அவரது இல்லத்தில் சந்தித்து திருவள்ளூர் மாவட்ட சாலையோர சிறுகடை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், சிறு வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்து பேரூராட்சி துறையினர், வருவாய்த்துறையினர், நெடுஞ்சாலைத்துறை ஆகிய அதிகாரி களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சி னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் என்றார். இந்த சந்திப்பில் சாலையோர சிறுகடை வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன், வட்ட தலைவர் வி.ஜோசப், வட்ட செயலாளர் வி.குப்பன், துணை நிர்வாகிகள் ராதிகா, பேபி, அஞ்சம்மாள், தேவி உள்ளிட்ட 40 கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.