districts

img

கொரோனா தொற்றிலிருந்து மீண்டார் கனிமொழி எம்.பி.

சென்னை, ஏப்.7- திமுக மகளிர் அணி செய லாளர் கனிமொழி தமிழக  சட்டப்பேரவைத் தேர்தலில்  போட்டியிட்ட மதச்சார்பற்ற  கூட்டணி கட்சி வேட்பாளர்  களை ஆதரித்து தீவிர பிரச் சாரம் மேற்கொண்டார். அவ ரது உடல்நிலையில் சோர்வு ஏற்பட்டதால் பிரசாரத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். சென்னையில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா  தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. உடனடியாக ஆழ்வார்பேட்டை வீட்டில்  அவர் தன்னை தனிமைப்ப டுத்திக் கொண்டார். இதற்கி டையே, முழு கவச உடையு டன் வந்து சட்டமன்றத் தேர்த லில் தனது வாக்கைப் பதிவு செய்தார். இந்நிலையில், திமுக எம்பி கனிமொழி கொரோனா தொற்றிலி ருந்து மீண்டார். மருத்துவமனையில் கொரோ னாவுக்கு சிகிச்சை பெற்று  வந்த கனிமொழி நல மடைந்து வீடு திரும்பினார்.

மு.க.தமிழரசு-சகாயம்

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழியின் சகோ தரர் மு.க.தமிழரசு கொரோ னாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர், சேப்பாக்கம்- திரு வல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டா லினை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்திருந்தார். இந்தநிலையில் அவருக்கு  கொரோனா பாதிப்பு ஏற்  பட்டுள்ளது. அவரது உடல்  நிலை பாதிக்கப்பட்ட நிலை யில் கொரோனா பரி சோதனை மேற்கொண்டனர். அப்போது கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மு.க.  தமிழரசு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

தமிழக அரசில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர் சகாயம். (58). இவர் கடந்த  சில மாதங்களுக்கு முன்பு  அரசியலில் ஈடுபடப்போவ தாக அறிவித்து இருந்தார். இதற்காக சகாயம் அரசியல் பேரவை என்ற அமைப்பை தொடங்கி இருந்தார். அவ ரது ஆதரவாளர்கள் 20  தொகுதிகளில் போட்டியிட்ட னர். அவர்களுக்கு ஆதரவாக  சகாயம் பிரசாரமும் செய்தார். இந்தநிலையில் சகா யத்துக்கு கடந்த சில நாட்க ளாக காய்ச்சல், சளி போன்ற பாதிப்புக்கள் இருந்தது. உடனடியாக அவர் மருத்  துவ பரிசோதனை மேற் கொண்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்  ராஜீவ்காந்தி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், வீட்டில் மேலும்  சில நாட்கள் தனிமைப்ப டுத்திக் கொள்ள அவருக்கு  மருத்துவர்கள் அறிவுறுத்தி யுள்ளனர்.