districts

img

பொங்கல் விழா கொண்டாடிய கள்ளக்குறிச்சி செய்தியாளர்கள்

கள்ளக்குறிச்சி, ஜன.12- கள்ளக்குறிச்சி  செய்தியாளர்கள் குடும்பத்தினருடன் சமத்துவப் பொங்கல் கொண்டாடினர்.  தமிழர் கலாச்சாரத்தை போற்றும் வகையில் மாவட்டச் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், ஒளிப்பதி வாளர்கள் வண்ணங்கள் ஒன்றாய் ஆடை உடுத்தி, தங்கள் குடும்பத்தினருடன் சமத்துவப் பொங்கல் விழா நடத்தினர்.  இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ.வேலு, சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மணி கண்ணன், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதூர்வேதி மக்களவை உறுப்பினர் மலையரசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.