districts

ஜூலை 20 மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

சென்னை, ஜூலை 18 - மின்துறையை பொதுத்துறையாக பாதுகாக்க கோரி ஜூலை 20 அன்று வட்ட மேற்பார்வை பொறியாளர் அலு வலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதுதொடர்பாக மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நட வடிக்கைக்குழு சார்பில் திங்களன்று (ஜூலை 18) செய்தியாளர் சந்திப்பு நடை பெற்றது. கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளருமான எஸ்.ராஜேந்திரன் கூறியதாவது: மின்துறையில் 56 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்பாமல், துணை மின் நிலையங்களின் பராமரிப்பு பணி, வடசென்னை அனல் மின் நிலைய 3வது அலகின் உற்பத்தி பணியை ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு கொடுத்துள்ளனர். இது தனியார்மயத்தை நோக்கியதாகவே உள்ளது. எனவே, மின்துறையை பொதுத் துறையாக பாதுகாக்க வேண்டும். 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை விரைந்து வழங்க வேண்டும், அரசாணை எண் 100 தொடர்பாக அரசு உத்தரவாதத்துடன் கூடிய முத்தரப்பு ஒப்பந்ததை ஏற்படுத்த வேண்டும். தரமான தள வாட பொருட்கள் தடையின்றி வழங்க வேண்டும். மறுபணியமர்த்தும் (ரி டிப்ளாய் மென்ட்) முறையை கைவிட்டு, பதவி உயர்வின் மூலம் பணியிடங்களை நிரப்ப வேண்டும், 2022 ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், சரண்டர் விடுப்பு சலுகையை மீண்டும் தர வேண்டும், நுகர்வோர் குறித்த தரவுகளை தனியாருக்கு தரக் கூடாது. மின்வாரிய ஆணை 2ஐ ரத்து செய்ய வேண்டும், கேங்மேன் பணியாளர்க ளுக்கு ஊர் மாறுதல் உள்ளிட்ட சலுகை களை வழங்க வேண்டும்  ஆகிய கோரிக்கைகளை  வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது. சென்னையில் மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பும், பிற பகுதிகளில் வட்ட மேற்பார்வை பொறி யாளர் அலுவலங்களிலும் காத்திருப்பு போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.