districts

img

பத்திரிகையாளர் மருத்துவ உதவித் தொகை ரூ.50ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு

சென்னை,ஏப்.27- பத்திரிகையாளர்க ளுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ உதவித் தொகை ரூ. 50 ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அறிவித்தார். சட்டப்பேரவையில் புதனன்று (ஏப்.27) செய்தி,விளம்பரம் மற்றும் எழுதுபொருள் அச்சு துறை ஆகிய மானியக்கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. முன்னதாக கொள்கை விளக்க குறிப்பை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் சாமிநாதன்,“அயோத்திதாச பண்டிதருக்கு சென்னை காந்தி மண்டப வளாகத்தில் சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்” என்றார். சென்னை காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிட வளா கத்தில் 2.21 ஏக்கரில் கலை ஞர் நினைவிட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரு கிறது என்றும் அவர் கூறினார்.

கி.ராவுக்கு சிலை
கரிசல் இலயக்கியத்தை உலகறியச் செய்த மறைந்த எழுத்தாளர் கி.ராஜ நாராயணனின் நினைவைப் போற்றும் வகையில் கோவில்பட்டியில் அரசு சார்பில் நூலகத்துடன் திரு வுருவச்சிலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றும் உத்திரபிரதேச மாநிலம் காசியில் பாரதி யார் வாழ்ந்த வீட்டைத் தமிழக அரசின் சார்பில் புனர மைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
திரைப்பட விருதுகள்
கடந்த சில ஆண்டு காலமாக வழங்கப்படா மல் நிறுத்தி வைக்கப்பட்டி ருக்கும் திரைப்பட மற்றும்  சின்னத் திரை கலைஞர்க ளுக்கான விருதுகள் மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் தயாரித்த குறும்படங்களைப் பார்வையிட்டு சிறந்த குறும்படங்களைத் தேர்வு செய்து மாணவர்களுக்கு விருதுகள் வங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் சாமிநாதன் கூறினார்.  பின்னர் அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு கள் வருமாறு:- பத்திரிகையாளர்கள் அரசு  ஓய்வூதியம் பெறு வதற்கான  பணிக்கொடை மற்றும் பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாக நடப்பு நிதியாண்டு முதல் உயர்த்தப்படும். தமி ழில் முதல் நாவல் எழுதிய  மாயூரம் முன்சீப் வேதநாய கத்திற்கு மயிலாடுதுறையில் அரங்கம் மற்றும் சிலை அமைக்கப்படும். வேலூர் மாநகர அண்ணா கலையரங்கம் ரூ.10 கோடியில் பல்நோக்குத் கலையரங்கமாக மாற்றப் படும். தருமபுரி மாவட்டத் திலுள்ள அதியமான் கோட்டை கோட்டை ரூ.1  கோடியில் புனரமைக்கப்படும்.

வாழ்நாள் சாதனையாளர் விருது
தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக் காட்சிப் பயிற்சி நிறுவனத்தை உலகதரத்திற்கு உயர்த்த முதற்கட்ட பணிகளுக்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப் படும். தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளர்களுக்கு கலைஞர் பெயரில் “கலை ஞர் கலைத்துறை வித்தகர்” விருது வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.