சென்னை, ஆக. 9- இந்தியாவின் 75ஆவது சுதந்திரதின விழா வரும் 15ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. விருப்பத்தகாத சம்பங்கள் நடைபெறாத வண்ணம் விமான நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கிய ரயில், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்திலும் கூடுதலாக 5 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை மோப்ப நாய் உதவியுடன் சோதனை, விமான நிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் வருகைக்கு ஏற்கனவே தடை அமலில் இருப்பதால், அதை மேலும் தீவிரமாக செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் பி.சி.ஏ.எஸ். பாஸ்கள் வழங்கு வதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதியில் கூடுதல் பாதுகாப்பும், பயணிகளின் பாதுகாப்பு சோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பயணிகள் திரவப்பொருட்கள், ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில்கள் போன்ற பொருட்களை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விமானங்களில் சரக்கு பார்சல்கள் ஏற்றும் பகுதிகளிலும் தீவிரமாக கண்காணித்து, பார்சல்கள் அனைத்தையும் பல கட்ட சோதனைக்கு பின்பே விமானங்களில் ஏற்ற அனுமதித்து வருகின்றனர். மேலும் விமான பயணிகளுக்கு கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுவதால், உள்நாட்டு பயணிகள், விமானம் புறப்படும் நேரத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், சர்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரத்திற்கு முன்னதாகவும் வருவதற்கு சென்னை விமான நிலைய அதிகாரிகள், பயணிகளை அறிவுறுத்தியுள்ளனர். அதைத்தொடர்ந்து சென்னை விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கூடுதல் பாதுகாப்பு வரும் 20ஆம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என்றும், தற்போதைய 5 அடுக்கு பாதுகாப்பு வருகிற 13, 14, 15 தேதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பான 7 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்படும் என்றும், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக ஆகஸ்ட் மாதம் ரயில் பயணி கள் பாதுகாப்பு மாதமாக ரயில்வே பாதுகாப்பு படை காவல் துறை சார்பில் கடைபிடிக்கப்படு கிறது. பரங்கிமலை, மீனம்பாக்கம், பழவந்தாங்கல், திரிசூலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.