சென்னை, ஜூலை 12-
ராயபுரம் பகுதி 53ஆவது வட்டத்தில் உள்ள மூலக் கொத்தளம் அரசு குடியிரு புகளில் அருகாமையில் குடிசை வீடுகளில் வசிப்ப வர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகளை ஒதுக்கக் கோரி பொது மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு சார்பில் மூலக்கொத்தளம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ் விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 138 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,044 குடி யிருப்புகள் கட்டப்பட்டுள் ளன. அந்த குடியிருப்புகளை முதலமைச்சர் புதனன்று (ஜூலை 12) காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்த குடியிருப்பு களுக்கு 5.25 லட்சம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில் அரு காமையில் வசிக்கும் ராமதாஸ் நகர், பிரிவில் தோட்டம், பால் டிப்போ ஆகிய பகுதி மக்களுக்கு வீடுகளை ஒதுக்காமல், வில்லிவாக்கத்தில் உள்ள மக்களுக்கு வீடுகள் ஒதுக் கப்படுவதாக தகவல்கள் வெளியாகியதை அடுத்து, அருகாமையில் வசிக்கும் எங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் வழங்க வேண்டும், பயனாளி கள் பங்களிப்பு தொகை இல்லாமல் இலவசமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிக்குழு உறுப்பினரும், குடியிருப்போர் நலச்சங் கத்தின் தலைவருமான ச.முருகேசன் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் இரா.மூர்த்தி, 1.50 லட்சம் ரூபா யில் குடியிருப்புகளை வழங்க வேண்டும் என வலி யுறுத்தி வருவதாகவும், இந்த பகுதியைச் சேர்ந்த வர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப் படும் என்றும் கூறினார். மேலும் சங்க நிர்வாகிகளை அமைச்சரிடம் அழைத்துச் செல்வதாகவும் தெரிவித் தார். இதையடுத்து அனை வரும் கலைந்து சென்றனர்.
இதில் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர ராஜன், செயற்குழு உறுப்பி னர் ஆர்.லோகநாதன், பகுதிச் செயலாளர் எஸ்.பவானி, பகுதிக் குழு உறுப் பினர்கள் டிவெங்கட், சா.நீதிதேவன், பி.ஜுகைப், எம்.அண்ணாமலை, குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் குணா, பொரு ளாளர் முனியம்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து எல்.சுந்தரராஜன் கூறுகையில், இந்த பகுதியில் வசிப்ப வர்கள் சாதாரண கூலித் தொழிலாளர்கள். அவர்கள் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி வீடுகளை வாங்க இயலாதவர்கள். எனவே குடியிருப்புகளுக்கு அரு காமையில் உள்ளவர்க ளுக்கு முன்னுரிமை அடிப் படையில், எந்த கட்டணமும் வசூலிக்காமல் இலவசமாக வீடுகள் ஒதுக்க வேண்டும். அதன்பிறகு எஞ்சிய குடி யிருப்புகளை பிற பகுதியில் வசிப்பவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றார்.