திருவள்ளூர், டி. 23- நெமிலிச்சேரியில் அரசு புறம்போக்கு நிலத்தில் குடி யிருக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் வலி யுறுத்தியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், நெமிலிச்சேரி கிராமத்தில் சர்வே எண் 198 ல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். நெமிலிச்சேரி விளா சத்தில் குடியிருப்பவர்கள் மின் இணைப்பு, கேஸ் இணைப்பு பெற்றுள்ளனர். மேலும் வீட்டு வரி, தண்ணீர் வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் செலுத்தி வருகின்றனர். அரசு ஆவணங்களான குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றையும் பெற்றுள்ளனர். இந்த நிலையில் சர்வே எண் 198 வசிக்கும் அண்ணாநகர், நாகாத்தம்மன் நகர், அம்பேத்கர் நகர் போன்ற பகுதிகளில் சுமார் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட குடி யிருப்புகள் உள்ள கிரா மத்தில், தமிழக அரசு மூல மாக அனைத்து தெருக்களி லும் சாலைகள், மழை நீர் கால்வாய்கள் அமைக்கப் பட்டு அனைத்து வீடுக ளுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப் பட்டுள்ளது. ரேசன் கடை, சத்துணவு மையம், மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள், மின் டிரான்ஸ்பார்மர்கள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் என அனைத்து வசதிகளும் பெற்றுள்ளனர். இதில் பொது மயான மும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அங்குள்ள குழந்தைகள் நெமிலிச்சேரி அரசு பள்ளி யில் படித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தாங்கள் குடியிருக்கும் வீடுகளை இன்னும் 15 நாட்களில் காலி செய்ய வேண்டும் என வருவாய்த் துறையினர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதனால் அம்மக்கள் கதிகலங்கி போய் உள்ள னர். இந்த திடீர் உத்தரவு குறித்து காரணம் கேட்டால் நீர் பிடிப்புப்பகுதி என்கி றார்கள். விவசாய பாசன மோ, நீர்நிலை பயன்பாடோ ஏதும் இல்லாத பகுதியாக உள்ளது. உடல் உழைப்பை மட்டும் நம்பி வாழ்ந்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை காலி செய்ய வேண்டும் என்ற அறிவிப்பு நோட்டீசால் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். தாங்கள் சிறுகசிறுக சம்பாதித்த பணத்தை எல்லாம் வீடுகளை கட்டி யுள்ளதால் திடீரென வேறு இடத்தில் குடியிருக்க வசதி வாய்ப்புகள் இல்லை என்பதால் மக்கள் தற்போது வசிக்கும் குடியிருப்பு வீடுகளை அவர்களின் வாழ்வாதாரத்தை கருணை யோடு அரசு பரிசீலித்து நிரந்தர குடியிருப்புகளாக அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நிலத்தை வகை மாற்றம் செய்து பட்டா வழங்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து திங்களன்று (டிச 23), மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இதில் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் இ.கங்காதரன், மாநில குழு உறுப்பினர் விஜியா, மாவட்ட குழு உறுப்பினர் ராமசாமி, வழக்கறிஞர் கோடீஸ்வரன், மக்கள் அதிகாரம் பிரகாஷ், சேது ராமன், செல்வகுமார் (பிபிஎம்), மக்கள் மன்ற தலைவர் அர்ச்சுனன், சங்கர் (கட்டுமான சங்கம்), ஆகியோர் கலந்து கொண்டனர்.