காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று (நவ. 12) சேப்பாக்கம் வளாகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். சென்னை மாவட்ட தலைவர் நா.சித்ரகலா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தை, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் த.முத்து குமாரசாமி வேல் தொடங்கி வைத்து பேசினார். சங்கத்தின் மாநிலச் செயலாளர் சு.கற்பகம், மாவட்ட செயலாளர் எஸ்.சுந்தரமூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வடசென்னை மாவட்டச் செயலாளர் ம.அந்தோணிசாமி, தலைவர் வே. விஜயகுமரன். சென்னை மாநகராட்சி செங்கொடி சங்க தலைவர் ஜெ.பட்டாபி உள்ளிட்டோர் போராட்டத்தை ஆதரித்து பேசினர்.