கள்ளக்குறிச்சி, ஆக.31- உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டி யலை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் செவ்வா யன்று (ஆக.31) வெளியிட்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 19 மாவட்ட ஊராட்சி வார்டுகள் 180 ஊராட்சி ஒன்றிய வார்டுகள் 412 கிராம ஊராட்சிகள் மற்றும் 3162 கிராம ஊராட்சி வார்டு கிளை உள்ளடக்கிய பகுதிகளில் நிறைவு செய்யப் பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயார் செய்து வெளியிடப்பட்டுள்ளது என்றார். மேலும் மாவட்டத்தில் 4 லட்சத்து 83 ஆயிரத்து 772 ஆண் வாக்காளர்கள், 4 லட்சத்து 77 ஆயிரத்து 812 பெண் வாக்காளர்க ளும், 186 மூன்றாம் பாலினத்தினரும் சேர்த்து மொத்தம் ஒன்பது லட்சத்து 61 ஆயிரத்து 770 வாக்காளர்கள் உள்ளனர் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.