வேலூர் ஏப். 1- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி குடியாத்தம் (தனி) சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வி.அமுலு குடியாத்தம் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். குடியாத்தம் தொகுதிக்குட்பட்ட மேல்பட்டி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமுலு வீதி வீதியாக நடந்து சென்று வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் தனக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தார். பூக்கடையில் பூக்கட்டி தனக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். மேலும் லட்சுமணபுரம் பகுதியில் 100 நாள் வேலை செய்து கொண்டிருந்த பெண்களிடம் சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி தனக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அவருடன் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் உடன் இருந்தனர். இதனிடையே வி.அமுலுவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடியாத்தம் நகரக் குழு சார்பில் ஆட்டோ பிரச்சாரமும், தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. பிரச்சார பயணத்திற்கு நகர செயலாளர் ஞ.காத்தவராயன் தலைமை தாங்கினார். என்.பாபு வி.குபேந்திரன், மகாதேவன் ஆறுமுகம், எஸ்.வாசுதேவன் தாமோதரன், என்.ஜோதிபாசு,செல்வம் பாலாஜி மற்றும் திரளான தோழர்கள் கலந்துகொண்டு பிரச்சார பயணத்தில் கலந்து கொண்டு வாக்குகளை சேகரித்தனர்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆற்காடு தொகுதி வேட்பாளர் n ஜ.எல்.ஈஸ்வரப்பனுக்கு ஆதரவு கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமிரி ஒன்றியக் குழு சார்பில் கலவை நகரத்தில் துவங்கி கலவை புத்தூர், வெள்ளம்பி, நம்பி தாங்கள், சங்கராபுரம், பென்னகர், மாம்பாக்கம் மேலப்பழந்தை, வாழைபந்தல் ஆயர்பாடி,மேல் புதுப்பாக்கம், கன்னிகாபுரம், மாந்தாங்கல் மோட்டூர் ஆகிய இடங்களில் நான்கு சக்கர வாகனத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். கட்சியின் வட்டார செயலாளர் ரகுபதி தலைமையில் நடைபெற்றது. கிட்டு, சேகர் வெங்கடேசன், கிளை உறுப்பினர்கள் செந்தில், மாதவி, காமாட்சி, லட்சுமி சுந்தரி, கேசவன், மூர்த்தி, சங்கர் சூர்யா ஆகியோர் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.