districts

img

3 ஆண்டுகளாக மூடிகிடக்கும் சமூக நலக்கூடத்தை திறந்திடுக!

சென்னை, அக். 7 - சைதை பன்னீர்செல்வம் நகரில் கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள சமூக நலக் கூடத்தை திறக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. கட்சியின் சைதாப்பேட்டை பகுதி 14வது மாநாடு ஞாயிறன்று (அக்.6) நடைபெற்றது. மாநாட்டில், அடையாறு கரையோரம் வெள்ளத் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும், ஆலந்தூர் சாலை, கோவிந்தன் சாலையில் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும், 168வது குடிசை மக்களுக்கு குடிமனைப்பட்டா வழங்குவதோடு, உட்புறச் சாலைகளை சீரமைக்க வேண்டும், சொத்துவரி, தொழில்வரி, குப்பை, கட்டிட கழிவுகளுக்கான அபராதம் உயர்வு, தனியார் சுடுகாட்டிற்கு அனுமதி ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுமாநாட்டிற்கு பகுதிக்குழு உறுப்பினர் ஒய்.இஸ்மாயில் தலைமை தாங்கினார். பகுதிக்குழு உறுப்பினர்கள் கே.மணிகண்டன் செங்கொடியை ஏற்ற,  டி.அன்பரசன் வரவேற்றார். வி.கவிதா அஞ்சலி தீர்மானத்தை  வாசித்தார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் தொடக்கவுரையாற்றினார். வேலை, அமைப்பு அறிக்கையை பகுதிச் செயலாளர் ஜி.வெங்கடேசனும், வரவு செலவு அறிக்கையை பகுதிக்குழு  உறுப்பினர் ஏ.சுந்தரமும் சமர்ப்பித்தனர். மாவட்டச் செயற் குழு உறுப்பினர் ச.லெனினும், மாவட்டக்குழு உறுப்பினர்  ஆர்.பாரதியும் வாழ்த்திப் பேசினர். மாவட்ட செயற்குழு  உறுப்பினர் டி.சுந்தர் நிறைவுரையாற்றினார். பன்னீர்செல்வம்  நகர் கிளைச் செயலாளர் பி.வேலுமணி நன்றி கூறினார். பகுதிக்குழு தேர்வு 9 கொண்ட பகுதிக்குழுவின் செயலாளராக ஜி.வெங்கடேசன் தேர்வு செய்யப்பட்டார்.