districts

சென்னை முக்கிய செய்திகள்

காவல்துறை அதிகாரிகள் அராஜகம் சிபிஎம் மாவட்டச்செயலாளர் எஸ்.கோபால் கண்டனம்

திருவள்ளூர், டிச.23- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் திங்களன்று (டிச.23) நடைபெற்ற சுங்கச்சாவடி முற்றுகை போராட்டத்தின் போது, விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பெ.சண்முகத்தின் சட்டையை பிடித்து அராஜகமாக நடந்து கொண்ட டிஎஸ்பி தமிழரசன் மீது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருவள்ளூர்  மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் வலி யுறுத்தியுள்ளனர். சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலைக்கு நிலத்தை கொடுத்து 10 ஆண்டுகளாக இழப்பீடு பெறாமல் உள்ள விவசாயிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்ட போராட்டம் நடைபெற்றது. விவசாயிகள் கூடி ஊர்வலமாக செல்ல முயன்ற போது, அவர்களை நகரவிடாமல் தலைவர்களை மூர்க்கத்தனமாக இழுத்து சென்று கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பல இடங்க ளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் வெகுஜன அமைப்புகள் போராட்டம் நடத்தும் போது பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையினர் அராஜக மாக நடந்து கொள்வது தொடர்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மக்களின் கோரிக்கைகளை தீர்க்க வேண்டிய வரு வாய்த்துறையினர் வேடிக்கை பார்க்கின்ற னர். போராடும் மக்களை காவல்துறையினர் வைத்து அடக்கி விடலாம் என்று மாவட்ட நிர்வாகம் மனப்பால் குடிக்கிறது. இது வன்கொடுமையாக கண்டிக்கத்தக்கது என கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்  ரூ.3,657 கோடிக்கு ஒப்பந்தம்

சென்னை, டிச.23- ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை தயாரிக்க ரூ.3,657.53 கோடி மதிப்பிலான  பணி ஆணை பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் என்ற பொதுத்துறை (பிஇஎம்எல்) நிறுவனத்திற்கு சென்னை மெட்ரோ நிர்வாகம் அளித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக், முன்னிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பாக இயக்குநர் ராஜேஷ்சதுர்வேதி மற்றும் பிஇஎம்எல் நிறுவனத்தின் இயக்குநர் ராஜீவ் குமார் குப்தா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஆலோசகர் எஸ். ராமசுப்பு, தலைமை பொது மேலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன், இணை பொது மேலாளர்எஸ்.சதீஷ் பிரபு  உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். இந்த ஒப்பந்ததின் கீழ், முதல் மெட்ரோ ரயில் 2026-ஆம் ஆண்டில் சென்னை மெட்ரோ ரயில் நிறு வனத்திடம் ஒப்படைக்கப்படும். அதைத் தொடர்ந்து கடுமை யான பாதைகள் மற்றும் ஓட்டுநர் இல்லாத ரயில் இயக்கத்திற்கான சோதனைகள் நடத்தப்படும். அதன்பின் மீதமுள்ள அனைத்து மெட்ரோ ரயில்களும் மார்ச் 2027 முதல் ஏப்ரல் 2029 வரை ஒவ்வொரு கட்டமாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.

நாளை ஞாயிறு அட்டவணைப்படி புறநகர் ரயில் சேவை

சென்னை, டிச.23- கிறிஸ்துமஸ் அன்று  புதன்கிழமை (டிச.25) சென்னை சென்ட்ரல்- அரக்கோணம், சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி/சூளுர்பேட்டை, சென்னை கடற்கரை- செங்கல்பட்டு ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதேபோல் முன்பதிவு மையங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் ஞாயிறு போன்று ஒரு ஷிப்ட் அடிப்படையில் இயங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானை மீண்டும் பார்மிற்கு கொண்டு வந்த அனுபவமில்லாத பயிற்சியாளர்

உள்கட்டமைப்பு மோதல் காரணமாக பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன் (தென் ஆப்பிரிக்கா), பந்துவீச்சு பயிற்சியாளர் கில்லெஸ்பி (ஆஸ்திரேலியா) ஆகியோர் சமீபத்தில் தங்களது பதவியை ராஜினாமா செய்து அவரவர் சொந்த நாட்டுக்கு திரும்பினர். இதனால் பாகிஸ்தான் அணி ஆளில்லா விமானத்தை போல தனியாக பறந்து கொண்டு இருந்தது. இத்தகைய சூழலில் அணியின் இடைக்கால பயிற்சியாளராக அந்நாட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆக்யூப் ஜாவேத்தை நியமித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். ஜாவேத் பிஎஸ்எல் அணிகளில் பயிற்சியாளராக பணியாற்றிய அனு பவம் கொண்டவர் என்ற நிலையில், ஜாவேத் வருகை பாகிஸ்தான் வீரர்களுக்கு சுதந்திரமான ஆட்ட திறனை வெளிப்படுத்த வழிவகுத்துள்ளது.  வீரர்களுக்கு அழுத்தம் தராமல் ஜாவேத் வித்தியாசமான முறையில் பயிற்சி அளிக்க, வெறும் ஒன்றரை மாதத்தில் மீண்டும் சூப்பர்பார்முக்கு திரும்பியுள்ளது பாகிஸ்தான் அணி. 2 நாட்களுக்கு முன் தென் ஆப்பிரிக்கா அணியை அதன் சொந்த மண்ணில் 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் சாதனையுடன் ஒருநாள் தொடரை வென்று அசத்தியுள்ளது பாகிஸ்தான் அணி. பந்துவீச்சு பயிற்சியாளர் இல்லாமலும், பெரியள வில் சர்வதேச அனுபவம் (பயிற்சியாளர்) இல்லாமலும் தனி ஒருவராக பாகிஸ்தான் அணியை நல்ல நிலைக்கு கொண்டு வந்த ஜாவேத்துக்கு கிரிக்கெட் உலகில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.  

ஜாவேத் கலக்கல்

ஜாவேத் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின்பு 3 முக்கிய சம்பவங்கள் பாகிஸ்தான் அணிக்கு முக்கிய பலமாக மாறியுள்ளது.  1.ஒருநாள் மற்றும் டி-20 கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரிஸ்வான் நல்ல நிலையில் அணியை கவனித்து வருகிறார். இவரது கட்டுப்பாட்டில் பாகிஸ்தான் அணி அருமையாக விளையாடி அடுத்தடுத்து தொடர்களை கைப் பற்றி வருகிறது. இதற்கு ஜாவேத்தின் ஆலோசனை தான் காரணம் ஆகும். 2. பயிற்சியாளர் உடனான (கேரி கிரிஸ்டன்) மோதல் காரணமாக பார்ம் பிரச்சனையில் சிக்கிய பாபர் அசாம் ரன் குவிக்க முடியாமல் திணறினார். ஆனால் புதிய பயிற்சியாளர் ஜாவேத்தின் பயிற்சியின் கீழ் பாபர் அசாம் மீண்டும் சூப்பர் பார்மில் நுழைந்து பட்டையை கிளப்பி வருகிறார். 3. பாபர் அசாம் போலவே பாகிஸ்தான் அணிக்கு புதுமுக வீரர் கிடைத்துள்ளார். தொடக்க வீரராக களமிறங்கும் சைம் அயூப் என்ற இளம் வீரர் தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் 2 சதமடித்தார். வேகப்பந்துவீச்சை சிறப்பாக எதிர் கொண்டு சூழ்நிலைக்கு ஏற்ப அதிரடியாக விளையாடி வரும் சைம் அயூப் பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி வீரர் சயீத் அன்வர் போல தூள் பரத்தி வருகிறார்.