காவிரியில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் டெல்டா பகுதி விவசாயிகள் சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைச் செய லாளர் பி.கற்பனைச்செல்வம் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளர் ஆர்.கே.சரவணன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.