districts

img

தொகுப்பூதியம், தினக்கூலி ஊழியர்கள் பணி நியமனம்

தமிழ்நாடு திருக்கோயில்களில் 31.07.2019 வரை 5 ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலி ,  தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வந்த திருக்கோயில் பணியாளர் வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோயில் பணியாளர் தே.குகன் உள்ளிட்ட 25  நபர்களுக்கு முதல்கட்டமாக  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்களன்று (ஏப்25) பணி நியமன ஆணை வழங்கினார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆணையர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த பணி நியமனத்திற்கு  தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியனின் சென்னை கோட்டத்தலைவர் எஸ்.தனசேகர் நன்றி தெரிவித்துள்ளார்.