districts

இ-சேவை மையத்தில் ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம், மார்ச் 31- இ-சேவை மையத்தில் பொதுமக்கள் விண்ண்பிக்கும் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு  காண வேண்டும் என்று மாவட்ட  ஆட்சியர் த.மோகன் அறிவுறுத்தி னார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தி லுள்ள இ-சேவை மையத்தை  வியாழனன்று (மார்ச் 31)  மாவட்ட ஆட்சியர் த.மோகன்  ஆய்வு செய்தார். அப்போது  பொதுமக்கள் தங்கள் அத்தி யாவசிய தேவைகளுக்கான ஆதார் அட்டை, மின்னணு குடும்ப  அட்டை, வருமானச் சான்று, சாதிச்சான்று, முதியோர் உதவித்  தொகை, விதவைச்சான்று, வாரிசு சான்று, பட்டா  மாறுதல் கேட்டு விண்ணப்பிக்கும் மனுக்கள் மீது உடனடி தீர்வு  காண அறிவுறுத்தினார். பொதுமக்களை அதிக நேரம் காத்திருக்க வைக் காமல் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். மேலும், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கி அவர்களின் விண்ணப் பத்தினை பதிவு செய்து சான்றி தழ் தயார் நிலையில் உள்ளதை முறையாக தகவல் தெரிவிக்க வேண்டும் என அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தி னார்.