சென்னை, செப். 19 - போலி பத்திரங்களை வைத்து பர்மா காலனி குடி யிருப்பை அபகரிக்க ரியல் எஸ்டேட் மாபியாக்கள் முயற்சிக்கின்றனர். எனவே, அங்கு குடியிருக்கும் மக்க ளுக்கு பட்டா வழங்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. சோழிங்கநல்லூர் தொகுதி, 182வது வட்டம், ராஜீவ்காந்தி அதி விரைவு தகவல் தொழில்நுட்பச் சாலையை யொட்டி (ஓஎம்ஆர்) பர்மா காலனி அமைந்துள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்பு பர்மாவில் இருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு அரசு 25 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி யது. அதில், 20.5 ஏக்கர் நிலத்தை பிரித்து மக்களுக்கு வழங்கப் பட்டது. எஞ்சியிருந்த 4.5 ஏக்கர் நிலத்தை அரசு பராமரிக்காமலும், ஒதுக்கீடு வழங்காமலும் வைத்தி ருந்தது. இதனால் அந்த இடம் புதர் மண்டி கிடந்தது. சென்னை நகருக்கு பிழைக்க வந்த மக்களிடம், ஒரு சிலர் இடத்தை மடக்கி விற்றனர். பணம் கொடுத்து வாங்கிய அந்த இடத்தை சமன்செய்து, வாழ தகுதி யானமதாக மாற்றி, தற்போது சுமார் 450 குடும்பங்கள் வசிக்கின்றன. நிலத்தின் மதிப்பு அதி கரித்ததையடுத்து அந்த இடத்தை கைப்பற்ற நில புரோக்கர்கள் முயற்சித்து வருகின்றனர். குடிசையாக இருந்த குடியிருப்புகளை அவ்வப்போது கொளுத்தி விடுவது போன்ற அராஜ கத்தில் ஈடுபட்டு வந்தனர். 2000ஆம் ஆண்டு ரவுடி கள் குடிசைகளை கொளுத்தியபோது மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், பல ஆண்டுகளாக முடங்கி கிடந்த பர்மா அகதிகள் சொசைட்டியை அரசியல் வாதிகள், அதிகாரிகள், ரியல் எஸ்டேட் முதலாளி கள் இணைந்து புதுப்பித்த னர். சொசைட்டி நிலத்தை தனிநபர்களுக்கு ஒதுக்கீடு செய்தது போன்று ஆவ ணங்களை உருவாக்கி உள்ளனர். அதனைகாட்டி, குடியிருப்பை அபகரிக்க முயற்சித்து வருகின்றனர். “பர்மா காலனியில் 1985ம் ஆண்டிலிருந்து மக்கள் குடியிருந்து வருகின்ற னர். அதற்கான அனைத்து ஆவனங்களையும் வைத்துள்ளனர். இதனை அடிப்படையாக கொண்டு குடியிருக்கும் மக்களுக்கு அரசு பட்டா வழங்க வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் வலியுறுத்தி உள்ளார்.