districts

img

வரி சலுகை வழங்க அதானி, அம்பானி ஏழைகளா? திருப்போரூர் பொதுக்கூட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி

திருப்போரூர், மே 26 - தொடர்ந்து வரிச் சலுகை வழங்க அதானி, அம்பானி என்ன ஏழைகளா என திருப்போரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர்  ஜி. ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார் மோடி அரசின் தவறான  பொருளாதார கொள்கை களுக்கு எதிராகவும், விலைவாசி உயர்வும், வேலையின்மைக்கு எதிராக இடதுசாரி கட்சிகள், விடு தலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருப்போரூர் பேரூ ராட்சி அலுவலகம் அருகே  பொதுக்கூட்டம் நடை பெற்றது. சிபிஎம் திருப் போரூர் வட்டச் செயலாளர் எம்.செல்வம் தலைமை தாங்கினார். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகையில், “ஒன்றிய அரசின் தவறான  பொருளாதாரக் கொள்கை யால் விலைவாசி உயர்வு  ரெக்கை கட்டி பறக்கிறது” என்றார். 100 நாள் வேலை  திட்டத்தை நகர்ப்புறங்களி லும் அமல்படுத்தி ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  நாளுக்குநாள் வேலை யின்மை அதிகரித்து வருவ தால் அரசுத் துறிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு வேண்டுகோள்விடுத்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதி அண்ணா, சிபிஐ மாவட்ட இணைச் செயலாளர் ஜெக தீசன், தொகுதிச் செயலாளர்  பார்த்திபன், சிபிஐ (எம்.எல்) மாவட்டச் செயலாளர் இரணியப்பன், விசிக மாநில செய்தித் தொடர்பாளர் பாவலன், மாவட்டச் செய லாளர் ராஜ்குமார் ஆகியோ ரும் பேசினர். செங்கல்பட்டு மாவட்டத் தில் கருங்குழி, படாளம் கூட்டுச் சாலை, கடப்பாக்கம், செய்யூர், பவுஞ்சூர், அச்சரப் பாக்கம், மதுராந்தகம், எல்.எண்டத்தூர், சூனாம்பேடு, திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், கூடுவாஞ் சேரி, மறைமலைநகர், சிங்கப் பெருமாள் கோயில், கோவ ளம், புதுப்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம், கிளர்ச்சி இயக்கங்கள் கடந்த 25ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.