கிருஷ்ணகிரி, ஜூன் 3- ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. கல்லூரி வளாகத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 381 மாணவர்களுக்கு இன்ஃபோசிஸ் நிறுவன துணைத் தலைவர் விக்டர் சுந்தர்ராஜ் பணி நியமன ஆணைகளை வழங்கினார். வேலைவாய்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சக்திவேல் நாகேஸ்வரன் வரவேற்க,வேலைவாய்ப்புத் துறை அலுவலர் கருப்பசாமி ஆண்டறிக்கையை சமர்பித்தார். முதல்வர் ரங்கநாத் வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களை வாழ்த்தி பேசினார். ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீநிதி நன்றி கூறினார்.