பொன்னேரி காங்கிரஸ் வேட்பாளர் துரைசந்திரசேகர் உறுதி
பொன்னேரி, ஏப். 2- மீனவர்கள் மற்றும் அனைத்து தரப்பினரின் வாழ்வாதாரத்தை பாதிக்கும், அதானி துறைமுக விரி வாக்கத் திட்டத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி கட்சிகளின் ஆதர வோடு போட்டியிடும் காங்கிரஸ் கட்சி யின் வேட்பாளர் துரை சந்திரசேகர் வாக்குறுதி அளித்துள்ளார். பொன்னேரி, மீஞ்சூர் மற்றும் சோழ வரம் ஊராட்சியில் 17 ஊராட்சி களை உள்ளடக்கிய பொன்னேரி தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 67ஆயிரத்து 673 வாக்காளர்கள் உள்ளனர். இந்தத் தொகுதி விவசாயி கள், மீனவர்கள், தொழிலாளர்கள், நெசவாளர்கள் நிறைந்த தொகுதி யாகும். சென்னையை அடுத்த மீஞ்சூர் பகுதியை சுற்றி சிபிசிஎல், ஐஓசி. பெட்ரோனாஸ், என்பிசி, காம ராஜர் துறைமுகம், அதானிதுறை முகம், எல் அண்ட் டி, வடசென்னை அனல்மின் நிலையம், வள்ளூர் அனல்மின் நிலையம், ஜம்போ பாக், ஜூவரி சிமெண்ட் போன்ற ஏராளமான தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிறுவனங்களில் பத்தாண்டு களுக்கு மேலாக ஒப்பந்த தொழிலா ளர்கள் குறைந்த ஊதியத்தில் பணி யாற்றி வருகின்றனர். இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. சக்திமிக்க போராட்டங்களை நடத்தி னாலும் நிர்வாகம் கண்டுகொள்வ தில்லை. தொழிலாளர் நலச் சட்டங் களை அமல்படுத்துவது கிடையாது. மத்திய அரசு கொண்டு வரும் தொழி லாளர் விரோத சட்டங்களை எதிர்க்கா மல் மாநில அரசு அமைதி காப்ப தோடு முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது.
சம்பல் கழிவுகளால் மீன்வளம் பாதிப்பு
தொழிற்சாலைகளின் சாம்பல் கழிவுகளால் கடலில் மீன்வளம் பாதிக்கப்பட்டதால் பழவேற்காடு மீனவ தொழிலாளர்கள் 1800 பேருக்கு அரசு வேலை தரப்படும் என்றும் 250 பேருக்கு எல் அண்டு டி கப்பல் கட்டும் நிறுவனத்தில் நிரந்தரபணி வழங்கப்படும் என்ற வாக்குறுதியை தனியார் நிறுவனங்களும் காப்பாற்ற வில்லை. இதை தட்டிக் கேட்க வேண் டிய மாவட்ட நிர்வாகமும் எதுவும் செய்யவில்லை. இதனால் பல்லா யிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்க்கையை இழந்து வீதியில் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
பூகோள வரைபடம் மாற்றம்
பொன்னேரி தொகுதிகுட்பட்ட இடங்களில் ஆரணி ஆறு, கொசஸ் தலை ஆறு, எண்ணூர் கழிமுகம் போன்ற நீர்நிலைகள் பழைய வரைபடத்தில் இடம்பெற்றிருந்தது. புதிய வரைபடத்தில் நீர்நிலைகளை தமிழக அரசுஅகற்றியுள்ளது. இந்த செயலை டில்லி பசுமை தீர்ப்பாய மும் கண்டித்துள்ளது. இப்படி இயற்கை வளங்களை அழிக்க அரசே துணைபோகிறது. இப்படி இயற்கை வளங்களை அழித்து உருவாக்கப் பட்ட தொழிற்சாலைகளால் மீஞ்சூர் அருகிலுள்ள சப்பாக்கம் கிராமமே அழிந்து விட்டது. அந்த மக்களுக்கு மாற்று இடமும், வேலை வாய்ப்பும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மக்கள் கோரிக்கைகள்
குடிமனை பட்டா இல்லா வீடு களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும், கோயில் நிலங்களில் குடி யிருக்கும் இடத்தை சொந்தமாக்க வேண்டும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவேண்டும், மீஞ்சூர் பேரூ ராட்சி, பழவேற்காடு பகுதிகளில் குடிநீர் தேவையை நிறைவேற்ற வேண்டும், மீஞ்சூர், பொன்னேரி,ஆரணி ஆகிய மூன்று பேரூராட்சிகளில் காய்கறி சந்தை அமைக்கவேண்டும். சாலை யோர வியாபாரிகளுக்கு வேண்டிங் கமிட்டி அமைத்து அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும், கனரக வாகனங்கள் நிலக் கரி எடுத்து செல்ல் ஊருக்குள் வராமல் வெளிப்புற சாலையில் செல்வதை உறுதிசெய்யவேண்டும், பொன்னேரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ மனையாக தரம் உயர்த்த வேண்டும், மீஞ்சூர் அரசு மருத்துவ மனையை விரிவாக்கம் செய்ய வேண்டும்,
பாதாள சாக்கடைத்திட்டம்
பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்தவேண்டும். கழிவு நீர் தேங்காமல் இருக்க உரிய கால்வாய் ஏற்பாடு செய்ய வேண்டும், தொழிற்சாலை கழிவுகள் கடலில் கலப்பதை தடுக்க வேண்டும், பொன்னேரி தொகுதியில் ஐடிஐ அமைக்கவேண்டும், ஆரணி கொசஸ்தலை ஆற்றில் தடுப்பு அணைகள் கட்டவேண்டும், வட சென்னை அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் சூடு நீர் கடல் நீரில் கலப்பதை தடுக்க குளிர் நிலை மாடம் அமைக்க வேண்டும், நெச வாளர்களுக்கு உரிய கடன் வசதி செய்துதரவேண்டும் உள்ளிட்ட ஏராளமான கோரிக்கைகளை தொகுதி மக்கள் வலியுறுத்தி வரு கின்றனர்.
அதானி துறைமுகம்
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டா லின் முதல்வராக பொறுப்பேற்ற வுடன் பொன்னேரி தொகுதி மக்க ளின் நலன்கள் பாதுகாக்கப்படும். பழ வேற்காடு முதல் சுண்ணாம்புகுளம் வரையுள்ள கடலோர பகுதிகளில் வாழும் மீனவர்கள் மற்றும் சாதா ரண மக்கள் என ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படும் அதானி துறைமுகம் விரிவாக்க திட்டத்தை தடுத்து நிறுத்தி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என வேட்பாளர் துரை சந்திரசேகர் உறுதி யளித்துள்ளார். நீர் பிடிப்பு நிலங்களை அதா னிக்கு அளிக்காமல் தடுக்கப்படும், முகத்துவாரம் தூர்வாரி சீரமைக்கப் படும் எனவும் வேட்பாளர் துரை.சந் திரசேகர் உறுதியளித்துள்ளார்.