சென்னை, மார்ச் 18- கோடம்பாக்கம் காவல் துறையினர் டிரஸ்ட்புரம் மைதானம் அருகே வியாழக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அசோக் நகர் புதூர் முதல் தெருவைச் சேர்ந்த கோ.கிஷோர் (23), கே.கே.நகர் ராணி அண்ணாநகரைச் சேர்ந்த ரா.கிஷோர்குமார் (20) ஆகியோர் போதை மாத்திரையுடன் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து சென்னை கொத்தவால்சாவடி கந்தப்பா செட்டித் தெருவைச் சேர்ந்த க.பூங்குன்றன் (26), விருது நகர் மாவட்டம் ராஜ பாளையம் எம்.ஆர்.நகரைச் சேர்ந்த பு.முத்துபாண்டி (23), தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடமலைகுண்டு பகுதியைச் சேர்ந்த சி.கோகுலன் (24), பூந்தமல்லி கந்தசாமிநகர் பவானி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த க.ராஜ லஷ்மி என்ற மித்ரா (22) ஆகிய 4 பேரை கைது செய்ய ப்பட்டனர். இவர்களிடமிருந்து 7,125 மாத்திரைகள், 2 மடிக் கணினி, ஒரு ஐ - பேடு, 9 கைப்பேசிகள், ரூ.4.41 லட்சம் ரொக்கம், 3 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கும்பலிடம் நடத்தப்பட்ட விசாரணை யில், வெளிமாநிலத்தி லிருந்து கொரியர் மூலம் போதை மாத்திரைகளை மொத்தமாக வாங்கி, சென் னையில் சமூக ஊடகங்கள், இணையத்தளம் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்புக் கொண்டு போதை மாத்திரைகளை விற்றிருப்பது தெரிய வந்துள்ளது.இது தொடர் பாக காவல் துறையினர், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.