செங்கல்பட்டு,ஜன.14- தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் கடந்த 30-ந் தேதி 17 வயது கொண்ட சிறுவனை திருட்டு வழக்கில் கைது செய்தனர். டிச. 31-ந் தேதி அவன் செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டான். அன்று மாலை சிறு வனுக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டது. சிறுவர் சீர்திருத்த பள்ளி கண்காணிப்பாளர் மோகன் உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் இறந்ததாக சீர்திருத்த பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. இதுதொடர்பாக செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். செங்கல்பட்டு, முதன்மை குற்றவியல் நீதி பதி முன்பு சிறுவனின் உடல் பிரேத பரி சோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு சிறுவனின் உடல் மருத்துவ பரி சோதனைக்காக கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் சிறு வனின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில் சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டி ருந்தது. இதையடுத்து செங்கல்பட்டு டவுன் காவலர்கள் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர். இந்தநிலையில் சிறுவன் கொலை தொடர்பாக சிறுவர் சீர்திருத்த பள்ளி கண்காணிப்பாளர் மோகன், துணை கண்காணிப்பாளர் நித்யானந்தம், காவ லர்கள் சரண்ராஜ், ஆனந்தராஜ், விஜய குமார், சந்திரபாபு ஆகிய 6 பேரை செங்கல்பட்டு டவுன் காவலர்கள் கைது செய்தனர். பின்னர் அவர்கள் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.