சென்னை, ஜூன் 30- சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்களிடையே அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிறப்பு முகாம்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டிவந்த மக்கள் கொரோனா 2ஆவது அலைக்கு பிறகு தடுப்பூசி போட முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதனால் கடந்த 2 மாதமாக தடுப்பூசி போடுபவர்க ளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழ்நாட்டில் சென்னையில்தான் அதிகம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது வரை 25 லட்சத்து 36 ஆயிரத்து 383 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். தினசரி 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி கள் நடைபெற்று வருகின்றன. இனிவரும் நாட்களில் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண் ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும். தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக சில பகுதிகளில் ஊசி போடுவது நிறுத்தப்பட்டாலும் 2 நாட்களில் அந்த பகுதி களுக்கு முழு அளவில் தடுப்பூசி அனுப்பி வைக்கப்படுகிறது. சென்னை நகரில் வசிக்கும் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை இலக்காக கொண்டுள்ளோம் என்றார்.