districts

img

சிறுத்தை நடமாட்டம் குறித்து எச்சரிக்கை விடுப்பு!

வேலூர்,டிசம்பர்.21- குடியாத்தத்தில் சிறுத்தை நடமாட்டம் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் சிறுத்தை தாக்கி பெண் உயிரிழந்ததையடுத்து இரவு நேரங்களில் தனியாகச் செல்வதைத் தவிக்கவும், வீட்டின் வெளிப்புறங்களில் விளக்குகளை எரியவிடவும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிறுத்தை நடமாட்டத்தை அறிந்தால் 97155 16707 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம், சிறுத்தை நடமாட்டத்தை ட்ரோன் கேமராக்கள் மூலம் தீவிரமாக கண்காணித்து வருவதால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.