வேலூர், ஜன.12 - வேலூர் நறுவீ மருத்துவ மனையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப் பட்டது. மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தலைமை வகித்தார். மருத்துவமனை ஊழி யர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து வந்தனர்.
இவ்விழாவில் துணைத் தலைவர் அனிதா சம்பத், செயல் இயக்குநர் மரு. பால் ஹென்றி, மருத்துவ சேவைகள் தலைவர் அரவிந்தன் நாயர், மருத்துவ கண்காணிப் பாளர் ஜேக்கப் ஜோஸ், மருத்துவக் கல்வி இயக்குநர் திலீப் மத்தாய், தலைமை நிதி அலுவலர் வெங்கட் ரங்கம், மருத்துவ மனை தணிக்கையாளர் நந்தகுமார், பொது மேலா ளர் நிதின் சம்பத் ஆகியோர் பங்கேற்றனர்.