districts

பிப்.23 விஐடியில் ‘ரிவேரா’ கலைதிருவிழா கிரிக்கெட் வீரர்கள், திரைக் கலைஞர்கள் பங்கேற்பு

வேலூர், பிப்.21- விஐடியில் ‘ரிவேரா 23’ கலைத்திருவிழா பிப்ரவரி 23 அன்று தொடங்கி 26 ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. இதில் கிரிக்கெட் வீரர்கள், திரைப்பட கலைஞர்கள், பின்னணி பாடகர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். விஐடியில் ஆண்டுதோறும் ரிவேரா என்ற சர்வதேச கலை மற்றும் விளையாட்டுத் திருவிழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு வருகிற 23ஆம் தேதி தொடங்கி 26 வரை நடைபெறுகிறது. இதில் பிரான்ஸ், இத்தாலி, போர்ச்சுகல், இலங்கை, சாம்பியா, எத்தியோப்பியா, வங்காள தேசம், நேபாளம், ஜப்பான், பூடான், குவைத், நைஜீரியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், சவுதி அரேபியா, மெக்சி கோ, வியட்நாம், கம்போடியா, இந்தோனேசியா, தான்சானியா, உகாண்டா, ஜிம்பாவே, ருவாண்டா, கேமரூன், கொலம்பியா, ஜெர்மனி ஆப்கானிஸ் தான், சிரியா, மியான்மர், சிங்கப்பூர் மங்கோலியா, தாய்லாந்து உள்ளிட்ட 44 வெளி நாடுகளில் உள்ள 700 பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் மற்றும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் இருந்து 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாண வர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த விழாவையொட்டி, விளையாட்டு போட்டிகள், நாடகம், நாட்டி யம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பாட்டுக்கு பாட்டு என மொத்தம் 150க்கும் மேற்ப்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தம் ரூபாய் 17 லட்சம் ரொக்க பரிசு,பதக்கம், கோப்பை, சான்றும் வழங்கப்படுகிறது. ரஹானா பிப். 23 அன்று காலை 6 மணிக்கு மரத்தான் ஓட்டத்துடன் நிகழ்ச்சி தொடங்கு கிறது. தொடக்க விழாவில் பிரபல கிரிக்கெட் வீரர் ரஹானா கலந்துகொள்கிறார்.  திரைப்பட பாடகர் அர்மான் மாலிக் குழு மற்றும் தாய்குடம் பிரிட்ஜ் குழுவின் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ச்சியாக, திரைப்பட பின்னணி பாடகியும் திரைக் கலைஞருமான ஆண்ட்ரியா குழுவினர் மற்றும் ஜாவித் அலி குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. திரைக் கலைஞர் ராசி கண்ணா  கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்க ளுக்கு பரிசு வழங்கு கிறார். ஐக்கியா நிகழ்ச்சி நமது நாட்டின் கலாச்சாரத்தை விளக்கும் வகை யில் ஐக்கியாவின் நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது.