மதுரை, அக்.1- அக்டோபர் 1 உலக முதி யோர்கள் மற்றும் பென்ச னர்கள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மத்திய - மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தமிழ்நாடு கூட்டமைப்பு சார்பில் சனிக்கிழமையன்று கருத்தரங்கம் மற்றும் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மாவட் டங்களில் அரசு சார்பில் உலக முதியோர் தின விழா கொண்டாடப்பட்டது. கூட்டமைப்பின் சார்பில் மதுரை அண்ணாநகர் அம் பிகா தியேட்டர் அருகில் நடைபெற்ற கருத்தரங்கத் திற்கு மாவட்டத் தலைவர் வி.பிச்சைராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் அ .பால்முருகன் வர வேற்று பேசினார். மாநிலச் செயலாளர் என் ஜெயச்சந்தி ரன், தமிழக மக்கள் ஒற் றுமை மேடை அமைப்பின் மாநிலத் தலைவர் பேராசிரி யர் அருணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஓய்வூ தியர் சங்க நிர்வாகிகள் ஆர். தேவராஜ், முனைவர் சு . கிருஷ்ணன், எம். முருகே சன், ஆர். மாரிச்சாமி, ஆர். நாகராஜன், எஸ்.பாண்டியன், சந்திரசேகரன், சி.செல்வின் சத்தியராஜ் ஆகியோர் கருத்துரையாற்றினர். இதில் 50 பெண்கள் உட்பட 500 ஓய் வூதியர்கள் பங்கேற்றனர். ஏ.முருகேசன் நன்றி கூறி னார்.
ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில் முதி யோர் தினத்தை முன்னிட்டு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். மத்திய - மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கி ணைப்புக்குழு சார்பாக சனி யன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் எஸ்.எம்.ஜெயசீலன் தலைமை வகித்தார். தலைவர்கள் எம்.எல்,கேசவன், அமல்ராஜ், என்.செல்வராஜ், ஜேம்ஸ் கஸ்பர்ராஜா, ஜான்போர் ஜியா, ராஜாராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நல்லகண்ணு நன்றி கூறி னார்.
சிவகங்கை
சிவகங்கை அருகே பெருங்குடியில் முதியோர் தின விழா மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதன ரெட்டி தலைமையில் நடந்தது .இந் நிகழ்வில் மூத்த வாக் காளர்களின் தொடர் பங்க ளிப்பாளர்கள் 21 நபர்கள் கௌரவப்படுத்தி பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இந் நிகழ்வில் சிவகங்கை சட் டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி பரமேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் அன்புகுளோ ரியா, பெருங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் சுரேஷ் குமார், மதகுபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சரஸ்வதி, குழந்தைகள் நலக்குழு மாவட்ட பொறுப்பாளர் நரேந்திரகுமார் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
இராமநாதபுரம்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் மாவட்ட தேர்தல் துறை மூலம் 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையத்தால் பாராட்டு சான்று வழங்கப் பட்டிருந்ததை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (பொது) சேக் மன்சூர், இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் மரகதனா தன், வட்டாட்சியர்கள் உள் ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.