சிவகங்கை, செப்.8- சிவகங்கை தமிழ்நாடு அறிவொளி சங்க மத்தின் சார்பாக செப்டம்பர் 8 உலக எழுத்தறிவு தின கருத்தரங்கம் சிவகங்கை சமுதாய கூட வளாகத்தில் நடைபெற்றது. முனைவர் ஆர்.காளீஸ்வரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவி யல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் முனைவர் கோபிநாத் வரவேற்று பேசி னார். பிரின்கஜேந்திரபாபு சிறப்புரை யாற்றினார். சிவகங்கை மாவட்ட முன் னாள் ஆட்சியர் ருசியா காந்தி நிறைவுரை யாற்றினார். அறிவியல் இயக்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.சுப்பிரமணி, முரு கேசன், மோகனசுந்தரம், உலக எழுத்தறிவு கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் பேரா. ராஜமாணிக்கம் ஆகியோர் பேசி னர்.