விருதுநகர், மார்ச்.18- விருதுநகரில் சிஐடியு-உழைக்கும் பெண்கள் ஒருங்கி ணைப்புக் குழு சார்பில் சர்வ தேச பெண்கள் தின கருத்தரங் கம் நடைபெற்றது. விருதுநகர் எம்.ஆர்.வி நினைவகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட அமைப்பா ளர் எம்.சாராள் தலைமை தாங்கி னார். அழகுஜோதி வரவேற்றார். சிஐடியு மாநில உதவித் தலை வர் எம்.மகாலட்சுமி துவக்கி வைத்துப் பேசினார். மாவட்ட செயலாளர் பி.என்.தேவா நிறை வுரையாற்றினார். பிச்சைக்கனி நன்றி கூறினார். இதில் ஏராள மானோர் பங்கேற்றனர்.