districts

img

வாலிபர் சங்க சிலம்பு பயிற்சிப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. பாராட்டு

மதுரை, ஜூலை 5-  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்  தின் மதுரை மாநகர் விளையாட்டுக்கழக சிலம்ப பயிற்சி பள்ளி மாணவ, மாணவி யர்கள் மாநில, மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்றனர். அவர்  களுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன் சால்வை அணி வித்து பாராட்டி, கௌரவித்தார். மதுரையில் பெத்தானியாபுரம், பைக்காரா, ஜெய்ஹிந்த்புரம், மீனாம் பாள்புரம் உட்பட பல்வேறு பகுதிகளில் வாலிபர் சங்கத்தின் விளையாட்டுக்கழகம் சார்பில் சிலம்பப் பயிற்சிப்பள்ளி நடத்தப் படுகிறது. இதில் தினசரி 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்று வரு கின்றனர். பயிற்சியில் பங்கு பெற்று தேர்ச்சி  பெறுபவர்கள் தேசிய, மாநில, மாவட்ட அள விலான போட்டிகளில் பங்கேற்கின்றனர்.  கடந்த மாதம் சென்னையில் மாநில அளவில் கலைஞர் நூற்றாண்டு சிலம்பப் போட்டி நடைபெற்றது.

இதில் பங்கேற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த வாலி பர் சங்க சிலம்பப் பயிற்சி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் செவ் வாயன்று நடைபெற்றது இதில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்,வெற்றிபெற்றவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். இரட்டை கம்பு பிரிவில் முதல் பரிசு பெற்ற அஜீதா, இரண்டாம் பரிசு பெற்ற ஹீரா, பள்ளி மாணவர்கள் பிரிவில் மான்  கொம்பு சண்டையில் முதலிடம் பிடித்த ஆறுமுக நாச்சியார், அலங்கார சிலம்ப போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த நந்தினி  மற்றும் மாவட்ட அளவில் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களை பாராட்டி, கௌரவிக்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநகர் மாவட்ட செயலாளர் மா. கணே சன், பகுதிக்குழு செயலாளர் ஏ. எஸ். செந்  தில்குமார், மாநகராட்சி துணை மேயர் டி.  நாகராஜன், வாலிபர் சங்க மாவட்டத் தலை வர் அ. பாவேல் சிந்தன், செயலாளர் டி.  செல்வா, பொருளாளர் எஸ். வேல் தேவா,  மாணவர் சங்க மாவட்ட தலைவர் டேவிட், சிலம்ப பயிற்சி பள்ளி ஆசிரியர்கள், மதுரை மாவட்ட சிலம்பட்ட கழக செயலா ளர் எஸ். பி. எம். மணி, பொருளாளர் கணே சன், மாடக்குளம் சேதுராமன், மதுரை மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு கழக அதிகாரி ராஜா, வாலிபர் சிலம்ப  பயிற்சி பள்ளி சார்பில் வடிவேல், செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்.