மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் முன்முயற்சியால் பேரையூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான நல்வாழ்வு சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம் மூலம் 1,313 மாற்றுத்திறனாளிகள் பயனடைந்தனர். முகாமில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் இரா.இரவிச்சந்திரன், துணை அலுவலர் சுபாஷ், ஆர். டி.ஓ. சங்கரலிங்கம், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராஜ் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். பேரையூர் பேரூராட்சி தலைவர் கே.கே.குருசாமி, துணைத் தலைவர் பாஸ்கர், மக்களவை உறுப்பினர் அலுவலக ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் கே. தவமணி, மாவட்டச் செயலாளர் வி.முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் முகாமில் பங்கேற்றவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களையும் உதவிகளையும் செய்துகொடுத்தனர்.