districts

முல்லைப் பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை

தேனி, ஜூலை 23- வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதி யில் மழையின்றி நீர்வரத்து இல்லாத தால் அணையின் நீர்மட்டம் 50 அடிக்கும் கீழ் சரிந்துவிட்டது .இருந்தபோதிலும் முல்லைப்பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதி யான வெள்ளிமலை, அரசரடி, வருச நாடு, கண்டமனூர் பகுதிகளில் அவ்வப்  போது சாரல் மழை மட்டுமே பெய்வதால்  மூலவைகையாற்றில் தண்ணீர் வரத்து  குறைவாகவே உள்ளது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்று விட்டது. இருந்தபோதும் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்  பட்டு வருகிறது. இதனால் சீராக குறைந்த நீர்மட்டம் ஞாயிறு காலை நிலவரப்படி 49.51 அடியாக உள்ளது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் வைகை அணையில் இருந்து பாசனத்  திற்கு தண்ணீர் திறக்கப்படும். தற் போது நீர்மட்டம் மிகவும் குறைந்து வரு வதால் குடிநீருக்கு மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.  முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.95 அடியாக உள்ளது. 404  கன அடி நீர் வருகிறது. 400 கன அடி நீர்  திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணை யின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது.  நீர்வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்  பாறை அணையின் நீர்மட்டம் 77.17 அடி யாக உள்ளது. நீர்வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படு கிறது. மழையளவு: பெரியாறு 7.8,  தேக்கடி 2.4 மி.மீ. மழை அளவு பதி வாகி உள்ளது.