நாகர்கோவில், டிச.15- தமிழக அரசின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவ னங்கள் குழு தலைவர் மற்றும் உறுப்பி னர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் பொது நிறுவனங்களின் முன்னேற்றம் குறித்து, ஆய்வு மேற்கொள்வ தற்காக புதனன்று (டிச.15) வந்தனர். அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு சட்ட மன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் எஸ்.ஆர்.ராஜா, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மற்றும் பொது நிறுவன குழு உறுப்பினர்கள் முன்னிலை யில் கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்கு வரத்துக் கழக படகுத்துறையினை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு அவற்றின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு சட்ட மன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு உறுப்பினர்கள் எஸ்.அரவிந்த் ரமேஷ், காதர் பாட்ஷா, முத்துராமலிங்கம், கே.தளபதி, ஆ. தமிழரசி, வி.பி.நாகைமாலி, நிவேதா எம்.முரு கன், எஸ்.எஸ்.பாலாஜி, ரூபி ஆர்.மனோ கரன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சிவப் பிரியா, குழு அலுவலர் பா.ரவிசந்திரன், சார்பு செயலாளர் க.நா.வளர்வேந்தன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மா.வீராசாமி, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் க.சேதுராமலிங்கம், அகஸ் தீஸ்வரம் வட்டாட்சியர் சேகர், கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறை மேலாளர் முத்துராமன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.