தஞ்சாவூர், பிப்.3 - நுண் நிதி நிறுவனங்களை ஒழுங்கு படுத்தும் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி தெரிவித்தார். தஞ்சாவூர் பனகல் கட்டடம் அருகே சனிக்கிழமை மாலை நடைபெற்ற இச்சங்கத்தின் டெல்டா மண்டல மாநாட்டில் பங்கேற்ற அவர் செய்தி யாளர்களிடம் தெரிவித்ததாவது: நுண் நிதி நிறுவனங்களின் அடா வடித்தனம் அடக்கப்பட வேண்டும். அந்நிறுவனங்கள் விதிக்கிற அபரிமித மான வட்டியைக் குறைக்க வேண்டும். நுண் நிதி நிறுவனங்களின் செயல் களால் பல பெண்கள் தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்நிறுவ னங்களை ஒழுங்குபடுத்த ஆந்திர மாநிலத்தில் ஏற்கெனவே சட்டம் உள்ளது. கர்நாடகத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத் திலும் நுண் நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். மாவட்ட ஆட்சி யரகத்தில் நுண் நிதி நிறுவனங்கள் தொடர்பான குறை தீர்க்கும் பிரிவை யும், உதவி மையத்தையும் உருவாக்க வேண்டும். கடன் கொடுப்பதைத் தமிழக அரசு எளிதாக்க வேண்டும். தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளில் சுய உதவிக் குழுக் களுக்கு கடன் கொடுத்தால், நுண் நிதி நிறுவனங்களை நாடிச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை தமிழகத்தில் மட்டுமல்லா மல், இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது. இதை ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்துவதற்கு முயற்சி எடுக்கப் பட வேண்டும். காவல் துறையினரும், நீதித்துறையினரும் பாலின நிகர் நிலைப் பார்வையுடன் குற்றங்களை முறையாக விசாரித்து, இருக்கக் கூடிய தண்டனையைக் கொடுத்தாலே, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை குறைக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த மாநாட்டில் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, ஜனநாயக மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண் டினா, மாநிலச் செயலர் எஸ்.தமிழ்ச்செல்வி, மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் டி.லதா, வி.மேரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வி வரவேற்றார். மாவட்டச் செயலர் இ.வசந்தி நன்றி கூறினார்.