விருதுநகர், ஜூலை 19- விருதுநகர் மாவட்டம், திரு வில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவில் வானமாமலை மண்டபத்தில் திரு வில்லிப்புத்தூர் நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் ஆடிப்பூரத் தேர்த்திருவிழா ஜூலை 22 அன்று நடைபெறுகிறது. அதற் கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களு டனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசபெரு மாள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலை வர் பேசுகையில், திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்ட திருவிழா வருகின்ற ஜூலை 22 சனிக் கிழமை அன்று நடைபெறவுள்ளது. பொதுமக்கள் மற்றும் பக்தர் களுக்குத் தேவையான குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகளை சிறப்பான முறையில் செய்திடவும், நகரின் முக்கிய பகுதிகளில் குறிப்பாக தேர் வலம் வரும் பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்க்கள் அமைத்திடவும், லாரிகள் மூலமும், தண் ணீர் பந்தல் அமைத்தும் சுகாதாரமான குடிநீர் விநியோகிக்கப்படவுள்ளது.
திருவில்லிப்புத்தூர் நகராட்சி மூலம் தற்காலிகமாக கழிப்பறை, நடமாடும் கழிப்பறை வசதிகள் செய்து தரப்பட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், உணவு விடுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் கள் பயன்படுத்தப்படுகிறதா என்பத னையும் ஆய்வு செய்ய வேண்டும். மேலும், பாதுகாப்பான குடிநீர் வழங்க வும், சுகாதாரமான முறையில் உணவு வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், குடிநீர் வசதி, சுகாதார வளாகம், தற்காலிகமாக கழிப்பறை, நடமாடும் கழிப்பறை வசதி போன்ற வசதிகள் எந்தெந்த இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது என்பதை பொது மக்கள் எளிதாக தெரிந்துகொள்ளும் வண்ணம் விளம்பரப்பதாகைகளும் வைக்கப்பட வேண்டும். இப்பணி களை திருவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையாளர் மேற்கொள்ள அறி வுறுத்தப்பட்டுள்ளது. தீயணைப்பு வண்டி களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக தயார் நிலையில் இருக்கவும்; இப்பாதுகாப்பு ஏற்பாடுகளை கோட்ட தீயணைப்பு அலுவலர் மேற்கொள்ள வேண்டும். மேலும், திருவில்லிப்புத்தூர் அரசு மருத்துவமனையில் தேரோட்டம் நடைபெறும் நாளன்று எந்த நேரத்திலும் முதலுதவி சிகிச்சை அளித்திடும் வகை யில் மருத்துவர் குழுவினர் போதிய மருந்துகள் மற்றும் மருத்துவப் பணி யாளர்களுடன் தயார் நிலையில் இருக்க வும், ஆம்புலன்ஸ்சுகளும் தயார் நிலை யில் வைக்கவும்,
திருக்கோயில் முன்புற முள்ள ஆடிப்பூரக் கொட்டகையிலும் தற்காலிக முதலுதவி சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு, போதிய மருத்து வப் பணியாளர்கள் பணியில் இருக்க வும், அதுபோன்று மருத்துவக்குழு அடங் கிய தற்காலிக சிகிச்சை மையங்கள் எந்ததெந்த இடத்தில் அமைக்கப்பட்டுள் ளது என்பதனையும் பொதுமக்கள் எளி தாக தெரிந்துகொள்ளும் வண்ணம் விளம் பரப்பதாகைகளும் வைக்கப்பட வேண்டும். இப்பணிகளை இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் ஆகி யோர் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. ஆடிப்பூரத் தேர்த்திருவிழா அன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க உரிய ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல போக்கு வரத்து அலுவலர், பொது மேலாளர் மற்றும் வட்டார போக்குவரத்து அலு வலர் ஆகியோர் மேற்கொள்ள அறி வுறுத்தப்பட்டுள்ளது. வெளியூர் பேருந்து கள் நிறுத்துவதற்கு வசதியாக தற்காலிய பேருந்துநிலையம் அமைக்கப்பட உள்ளது. எனவே, அலுவலர்கள் ஒருங்கி ணைந்து சிறப்பான முறையில் செயல் பட்டு நல்ல முறையில் தேர்த்திருவிழா வினை நடத்தி முடித்திட முழு ஒத்து ழைப்பு நல்கிட வேண்டும் என முனைவர் வீ.ப.ஜெயசீலன் கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன், துணை காவல் கண்காணிப்பாளர் முகேஷ் ஜெயக்குமார், ஆண்டாள் கோவில் செயல் அலுவலர் முத்துராஜா, தக்கார் ரவிச்சந்திரன் உட்பட பல்வேறு துறையைச் சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.