districts

img

சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி

நாகர்கோவில், அக்.11-    குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, குழித்துறையில் சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி அமைக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கரம்கோர்த்து முழக்க மிட்டனர்.   தமிழகத்தில் வகுப்பு வாத சக்திகளை முறியடித்து மக்கள் ஒற்றுமையை பாது காக்கும் வகையில் அக்.11 செவ்வாயன்று இடதுசாரி மதச்சார்பற்ற அரசியல் கட்சி கள், பல்வேறு வெகுமக்கள் அமைப்புகள் இணைந்து சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி அமைத்தன. நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை முதல் ப.ஜீவானந்தம் சிலை வரை கரம்கோர்த்து மனிதச் சங்கிலி அமைக்கப்பட்டது. முன்னதாக நடந்த விளக்க கூட்டத்துக்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி தலைமை வகித்தார். காங்கிரஸ் ராதா கிருஷ்ணன், மதிமுக வெற்றி வேல், விசிக பகலவன், சிபி சுபாஷ் சந்திரபோஸ், மனித நேய மக்கள் கட்சி சுல்பிகர், சிபிஐ- எம்எல் லிபரேசன் அய்யப்பன், தி.க பொன்னு ராசன், பச்சை தமிழகம் கட்சி  சுப.உதய குமார், மனித நேய ஜனநாயக கட்சி ஆவீஸ், தமிழக வாழ்வுரி மைக் கட்சி சுதாகர் ஆகி யோர் பேசினர். குழித்துறை சந்திப்பில் நடைபெற்ற இயக்கத்திற்கு சிபிஎம்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் அனந்த சேகர் தலைமை தாங்கினார்.  சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.அண்ணாதுரை, காங்கிரஸ் கட்சியின் விஜய் வசந்த் எம் பி , மாவட்ட தலைவர் பிஜூ லால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுரேஷ் மேசிய தாஸ், விசிக சார்பில் திலீப்,  எம் சிபிஐ (யு) சார்பில் திலீப்  ஆகியோர் பேசினர். இது போல் தக்கலையில் விடு தலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் மாத்தூர் ஜெயன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சி.ஸ்டாலின்தாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் பேசினர்.