திண்டுக்கல், ஜுலை 8- திண்டுக்கல் மாவட்டம், வட மதுரை ஒன்றியப்பகுதியில் தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக்கம் சனிக்கிழ மையன்று நடைபெற்றது. இதில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் தீக்கதிர் மதுரை பதிப்பு பொறுப்பாசிரியருமான எஸ்.பி.ராஜேந்திரன் கலந்து கொண்டு சந்தாக்களை சேகரித்தார். கட்சியின் திண்டுக்கல் மாவட்டச்செயற்குழு உறுப்பினர் டி.முத்துச்சாமி, மாவட் டக்குழு உறுப்பினர் சி.குணசேக ரன், வடமதுரை பேரூராட்சி துணைத்தலைவரும் ஒன்றியச்செய லாருமான எம்.மலைச்சாமி, ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் சண்முகம், சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திமுக வடமதுரை பேரூர் கழகச்செயலாளர் எஸ்.கணே சன் தீக்கதிர் சந்தாவை எஸ்.பி. ராஜேந்திரனிடம் வழங்கினார். 16 சந்தாக்கள் சேகரிக்கப்பட்டன.
ஆத்தூர் ஒன்றியம்
ஆத்தூர் ஒன்றியப்பகுதியில் தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. கட்சியின் மாவட்டச்செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.கணேசன், ஒன்றியச்செய லாளர் சூசைமேரி, ஆகியோர் கலந்து கொண்டனர். ஆதிலட்சுமி புரம் உள்ளிட்ட பல கிராமங்களில் தீக்கதி ருக்கு சந்தாக்களை அரசியல் பிர முகர்கள் வழங்கினர். 13 சந்தாக்கள் சேகரிக்கப்பட்டன.
தொப்பம்பட்டி
தொப்பம்பட்டி ஒன்றியத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் கலந்து கொண்டு சந்தா சேகரித்தார். மாவட்டச்செயற் குழு உறுப்பினர் எம்.ராமசாமி, ஒன்றி யக்குழு செயலாளர் என். கனகு மற்றும் ஒன்றியக்குழு உறுப்பி னர்கள், கிளைச்செயலாளர்கள் கலந்து கொண்டு சந்தாக்கள் சேக ரித்தனர். திண்டுக்கல் ஒன்றியப்பகுதியில் உள்ள என்.எஸ்.நகரில் மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் சந்தா சேகரித்தார். ஒன்றியச்செய லாளர் ஆர். சரத்குமார், ஒன்றி யக்குழு உறுப்பினர் கே.பி.நேரு, கிளைச்செயலாளர் வனசேகரன், அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க தலைவர்கள் மாணிக்கம், ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்ட னர்.