districts

வங்கி காவலாளியை உள்ளே வைத்து பூட்டிவிட்டு நகை கடையில் கொள்ளை முயற்சி

வேடசந்தூர், செப்.20-  திண்டுக்கல் மாவட்டம் வேட சந்தூரில் கடைவீதியில் உள்ள திண்டுக் கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்பு நள்ளிரவு 2 மணிக்கு முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள் வந்தனர். வங்கி எதிரே உள்ள குமரேசன் என்ப வருக்கு சொந்தமான நகைகடையில் கொள்ளையடிக்க  திட்டமிட்டனர். அதற் காக நகைக்கடையின் முன்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேராவை வேறு பக்கம் திருப்பி வைத்தனர். பிறகு முன்பக்க கம்பி கேட் கதவின் பூட்டைஉடைத்தனர். அப்போது எதிரே உள்ள வங்கியின் காவலாளி உமாபதி தூங்காமல் வங்கி யின் உட்பகுதியில் அமர்ந்திருந்ததை கண்ட கொள்ளையர்கள் நகை கடை யில் உடைத்து எடுத்த பூட்டை வைத்து வங்கியின் முன்பக்க கேட்டின் கதவை பூட்டினார்கள். பின்னர் நகை கடையின் கம்பி கேட் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் ஷட்டர்  கதவை இரும்பு ராடு கொண்டு நெம்பி  திறக்க முயன்றபோது சக்தம் கேட்டு எதிரே வங்கியில் இருந்த காவலாளி உமாபதி நிலைமை உணர்ந்து திருடன் திருடன் என்று சக்தம் போட்டார். இதானல் அங்கிருந்து 2 கொள்ளை யர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். இதன் பிறகு பூட்டிய பூட்டை திறந்து கொண்டு வங்கி காவலாளி வெளியே  வந்து மீண்டும் சக்தம் போட்டுள்ளார். கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதால் நகை கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் தப்பியது.

முன்னதாக நாடார் தெருவிற்குள் சென்ற கொள்ளையர்கள் ஹலீப்ரகுமான் என்பவருக்கு சொந்தமான செல் போன் கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ 8 ஆயிரம் பணத்தை யும் 2 பட்டன் செல்போன்கள், 3 ஹட்போன் களையும் எடுத்துக்கொண்டனர். பிறகு அதே கடைவீதியில் சற்று தள்ளிச்சென்று தியாகராஜன் என்பவ ருக்கு சொந்த நகை பட்டறையின் பூட்டை உடைத்து கடைக்குள் புகுந்து ரூ. 14 ஆயிரத்தை எடுத்துக்கொண்டனர். பிறகு அருகே உள்ள ஜவுளிகடை கள், செல்போன் கடை உள்ளிட்ட 3 கடை களின் பூட்டை உடைக்க முயன்று முடி யாததால்  திருடிய பணம் பொருட்களு டன் அங்கிருந்து நகை கடையை கொள்ளையடிக்க முயன்றனர் என்பது குறிப்பிடதக்கதாகும். இந்த கொள்ளைகள் பற்றி தெரிந்த தும்  திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு துர்கா தேவி, ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் வேலுமணி உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்து, கொள்ளை யடிக்க முயன்ற நகை கடை மற்றும் திருடுபோன கடைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.  இதே போல வேடசந்தூர் அருகே உள்ள சித்தமரம் நாலரோடு கிராமத்தில் முத்துராஜ் என்பவருக்கு சொந்தமான இசேவை மையத்தின் நள்ளிரவில் பூட்டி யாரோ மர்ம ஆசாமிகள் உடைத்து உள்ளே இருந்த ரூ 70 ஆயிரம் மதிப் புள்ள கேமரா மற்றும் மெமரி கார்டுகள், செல்போன் பவர் பேங்க் ஆகியவற்றை திருடினர். பிறகு அருகே இருந்த முத்துக் கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த ரூ 2 ஆயிரம் மற்றும் சாக்லெட் பாக்கெட்டுக்களை திருடிச்சென்றனர். இது குறித்து வேடசந்தூர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதி யில் உள்ள கண்காணிப்பு கேமராக்க ளில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.