districts

மதுரை விரைவு செய்திகள்

தொடர்ந்து 70 அடியாக நீடிக்கும்  வைகை அணை நீர்மட்டம்

தேனி, செப்.4- நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்,  வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 70 அடியாக நீடித்து வருகிறது. கேரளா, மேற்குதொடர்ச்சி மலை, தேனி மாவட்டத்தில்  கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  இதனால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டு கிறது. மேலும் ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடு கிறது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் 70.01 அடி யிலேயே நீடித்து வருகிறது. அணைக்கு 3320 கன அடிநீர்  வருகிறது. அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். வரத்துக்கு ஏற்ப நீர் திறந்து விடப்படுகிறது. ஞாயிறு காலை  முதல் நீர் திறப்பு 3213 கனஅடியாக உயர்த்தப்பட்டது. முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 136.40 அடியாக  உள்ளது. 1406 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து 1866 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணை யின் நீர்மட்டம் 55 அடி, வருகிற 184 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம்  126.34 அடியாக உள்ளது. 15 கனஅடி நீர் வருகிறது. 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மழையளவு ;பெரியாறு 1.8, சோத்துப்பாறை 1.4, மஞ்சளாறு 0.8, ஆண்டிபட்டி 2.6 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

மதுரை - செங்கோட்டை ரயில் ஆறு நாட்களுக்கு ரத்து

மதுரை, செப்.4- இராஜபாளையம் - சங்கரன் கோவில் பிரிவில் ரயில்  பாதை பலப்படுத்தும் பணிகள் நடைபெறுவதால் மதுரை யில் காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - செங்கோட்டை (06663) மற்றும் செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை - மதுரை (06664) முன்பதிவு இல்லாத  சிறப்பு ரயில்கள் ஆகியவை செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 10 வரை முழுமையாக ரத்து செய்யப்படும் என்று மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தந்தை பெரியார் விருது  பெற விண்ணப்பிக்கலாம் 

சிவகங்கை, செப்.4- சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வ தற்காக “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது”  1995  ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோ ருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்  பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விரு தாளர் முதலமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார்.  2022-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் ”சமூக நீதிக்  கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விரு தாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படு கிறது. எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்க ளின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்  ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாத னைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்  ணப்பத்தினை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு விண்ணப்  பிக்கலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி  நாள்: 31.10.2022 ஆகும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ப. மதுசூதன் ரெட்டிதெரிவித்துள்ளார்.

மாணவிக்கு பாலியல் தொல்லை தந்தவருக்கு ஆயுள் தண்டனை

விருதுநகர், செப்.4- அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம் பட்டியைச் சேர்ந்தவர் சந்திரமோகன் (32). இவர் கடந்த 2013  ஆம் ஆண்டு 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலி யல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்த புகாரின் அடிப்ப டையில் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார்  வழக்குப்பதிவு செய்து சந்திரமோகனை கைது செய்த னர். இவ்வழக்கானது, திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த், சந்திர மோகனுக்கு ஆயுள்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அப ராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

திருவில்லிபுத்தூர், செப்.4-  திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் மல்லி ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. ஆணை யாளர் சிவகுமார் முன்னிலை வகித்தார். 31 தீர்மானங்கள் வாசித்து நிறைவேற்றப்பட்டன. இதில் 13 ஒன்றிய உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். ஒன்றியக்குழு தலைவர் மல்லி ஆறுமுகம் பேசுகை யில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஒன்றிய, மாநில அரசுகள் ஊராட்சி ஒன்றி யத்திற்கு ரூ.11 கோடி நிதி ஒதுக்கி வேலை நடைபெற்று வருகிறது. அந்தந்த வார்டுகளில் அந்தந்த உறுப்பினர்கள் சாலை வசதி, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதி களுக்கு மனு கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். ஊராட்சி பொறியா ளர் மாரியம்மாள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹேமாமாலினி,சம்பத் சீனிவாசன், தனலட்சுமி,மதன் குமார்,அருள்ஜெயமேரி,ஒன்றிய பணி மேற்பார்வையா ளர் ஞானகுரு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நவீன சலவையகங்கள்  அமைக்க விண்ணப்பிக்கலாம் சிவகங்கை ஆட்சியர் தகவல் சி

சிவகங்கை,செப்.4-  நவீன சலவையகங்கள் மற்றும் ஆயத்த ஆடையக  உற்பத்தி அலகு அமைத்திட விரும்பும் குழுவினர்கள் உரிய  ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என  மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப் பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின ரின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறி வரும் சூழ லுக்கு ஏற்ப, நவீன சலவையங்கள் மற்றும் ஆயத்த ஆடை யக உற்பத்தி அலகு அமைக்கப்பட உள்ளது. இதன்படி,  நவீன சலவையங்கள் ஏற்கபடுத்த சலவை தொழில் தெரிந்த  10 நபர்களை கொண்ட குழு ஒன்றுக்கு ரூ.3 லட்சமும் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு ஏற்படுத்த தையல் தொழில் தெரிந்த ஆண் மற்றும் பெண் 10 நபர்கள் கொண்ட குழு விற்கு ரூ.3 லட்சம் வீதம் நிதி உதவி வழங்கப்பட உள்ளது.  மேற்படி, குழுவினர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவ ராக இருத்தல் வேண்டும் உறுப்பினர்களுக்கு குறைந்த பட்ச வயது வரம்பு 20 ஆகும். சிறு, குறு, மற்றும் நடுத்தர  தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற  நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப் படும். விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழு விற்கு முன்னுரிமை வழங்கப்படும். 10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருக்க வேண்டும். குழுவில் உள்ள பய னாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகா மல் இருக்க வேண்டும் 10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தல் அவசியம் ஆகும். மேற்படி, திட்டத்தில் பயன்பெற விருப்பமும், தகுதி யும் உள்ள குழுவினர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அனுகி உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்  பெறலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். 

ரூ 50 லட்சத்துடன் மாயமான  ஓபிஎஸ் ஆதரவாளரின் ஓட்டுநர் கைது

தேனி, செப்.4-  பெரியகுளத்தில் ரூ 50 லட்சம் பணத்துடன் தலைமறை வான முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதர வாளரின் கார் ஓட்டுநரை தென்கரை காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமையன்று கைது செய்தனர். பெரியகுளத்தை சேர்ந்தவர் நாராயணன் (43). இவர் முன்னாள் முதல்வர் ஓ .பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதர வாளராகவும் இருந்து அதிமுக இளைஞர்,இளம் பெண்  பாசறை மாவட்ட செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஆகஸ்ட் 27 ஆம் தேதி தனது டிரைவர் ஸ்ரீதருடன் காரில் சென்னைக்கு சென்று விட்டு, அங்கிருந்து தொழில் வேலை யை முடித்து விட்டு, ரூ 50 இலட்சத்துடன் காரில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். நாராயணன் உசிலம்பட்டியிலுள்ள உறவினர் இறந்த  நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். தனது கார் டிரைவர் ஸ்ரீதரை  பணத்துடன் ஊருக்கு அனுப்பியுள்ளார். ஆனால் அவரை காணவில்லையாம். பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லையாம். இச்சம்பவம் குறித்து தென்கரை காவல் நிலையத்தில் நாராயணன் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து, தேடி வந்தனர்.  ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்ரீதரை கைது செய்து, விசா ரணை நடத்தினர். விசாரணையில் ரூ 50 இலட்சம் எடுத்து  வந்ததை, ஒப்புக்கொண்டாராம், ரூ 15 இலட்சத்தை ஒப்ப டைத்துள்ளார். ரூ 35 இலட்சம் குறித்து விசாரணை நடத்தி  வருவதாகவும் , இந்த பணம் எதற்காக, யாருக்கு கொடுப்ப தற்காக எடுத்துச் செல்லப்பட்டது எனவும், வேறு ஏதேனும்  அரசியல் காரணங்களுக்காக இந்த பணம் கைமாறப் பட்டதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர். 

இன்றைய நிகழ்ச்சி

மதுரை அமெரிக்கன் கல்லூரி சேட்டிலைட் கேம்பசில் இயற்பியல் மாணவர்களுக்கான கம்ப்யூட்டரைஸ்ட் பிசிக்ஸ் எக்ஸ்பிரிமெண்ட் பயிற்சிப்பட்டறை, இடம்: சத்தி ரப்பட்டி. காலை 9:30 மணி. பங்கேற்பு:பேராசிரியர் ராஜேஷ்.

மதுரை வழியாக  மைசூர் - திருவனந்தபுரம்  பண்டிகை கால சிறப்பு ரயில்

மதுரை, செப்.4-  பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க மைசூர் - திருவனந்தபுரம் ரயில் நிலையங்கள் இடையே ஒரு சிறப்பு ரயிலை இயக்க தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி மைசூர் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் (06201) செப்டம்பர் 7 அன்று மதியம் 12.15 மணிக்கு மைசூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 07.30 மணிக்கு திருவனந்தபுரம் சென்று சேரும்.  மறு மார்க்கத்தில் திருவனந்தபுரம் - மைசூர் சிறப்பு ரயில்  (06202) செப்டம்பர் 8 அன்று மதியம் 12.45 மணிக்கு திரு வனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.45 மணிக்கு மைசூர் சென்று சேரும். இந்த ரயில்கள் மாண்டியா, கெங்கேரி, பெங்களூரு, பெங்களூரு கண்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, ஓமலூர் சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில் டவுன் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன வசதி மூன்றடுக்கு படுக்கை  வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் இணைக்கப்படும்.

சீட்டு நடத்தி ரூ.68 லட்சம்  மோசடி செய்தவர் மீது வழக்கு

சாத்தூர், செப்.4- சாத்தூர் அருகே சீட்டு நடத்தி ரூ.68 லட்சம் மோசடி  செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர். சாத்தூர் அருகே உள்ள சத்திரபட்டியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் (63). இவர் வெள்ளக்கரை சாலையில் நிதிநிறுவனம் நடத்தி வந்த சையது பாஷா என்பவரிடம் ரூ.1 லட்சம் சீட்டில் சேர்ந்துள்ளார். இதற்காக மாதந்தோறும் தவணை செலுத்தினாராம். ஆனால், தவணைக்காலம் முடிந்த பின்பும் சையது  பாஷா பணத்தை தராமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.  இதேபோல், அப்பகுதியை சேர்ந்த பலரிடம் ரூ.68  லட்சம் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இத னால் அதிர்ச்சி அடைந்த சுபாஷ் சந்திரபோஸ் சாத்தூர் நீதிமன்றத்தில் இருமுறை வழக்கு தொடர்ந்தார். விசா ரணையின் போது சையது பாஷா ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிமன்றம் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன்பேரில் சாத்தூர் நகர் போலீ சார் வழக்குப் பதிவு செய்து சையது பாஷாவை தேடி  வருகின்றனர்.

இராஜபாளையம்: ஜவுளி கடையில்  ரூ.6 லட்சம்  கொள்ளை

இராஜபாளையம், செப்.4- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில்  பிரபல  ஜவுளி கடையில்  இரும்பு பெட்டி திறந்த நிலையில் கிடந்துள்ளது. உடனடியாக  மேனேஜர் பாண்டி உரிமை யாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார் .இதைத்தொடர்ந்து கடையின் உரிமையாளர் வந்து பார்த்தபோது கடையிலி ருந்து ஆறு லட்சம் ரூபாய் பணம் திருடு போனது தெரிய வந்தது. இராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகார்  அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து கடை யில் பணியாற்றக்கூடிய ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவில்லிபுத்தூர் அருகே  விபத்தில் முதியவர் பலி

திருவில்லிபுத்தூர், செப்.4- திருவில்லிபுத்தூர் அருகே அய்யனார்புரத்தை சேர்ந்தவர்  சதுரகிரியான்(77). இவருக்கு உடல்நிலை சரி யில்லாததால் தனது பேரன் விக்னேஷ்வரனை அழைத்  துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்றார். மூவரைவென்றான் அருகே சென்ற பொது எதிரே மண் ஏற்றி வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில்  சதுரகிரியான் சம்பவ இடத்திலேயே பலியானார். சதுரகிரியான் மகன் மலைச்சாமி அளித்த புகாரில் டிராக்டரை ஒட்டி வந்த பால்பாண்டி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து நத்தம்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

செப். 7,8,9,10ல்  ராகுல்காந்தி குமரியில் பாதயாத்திரை இடங்களை கே.எஸ்.அழகிரி பார்வையிட்டார்

நாகர்கோவில், செப்.4- காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலை வர் ராகுல் காந்தி செப்டம்பர் 7 இல் தொடங்கி கன்னியாகுமரி முதல் காஷ்மீர்  வரை 3750 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரை மேற்கொள்கிறார். இதை யொட்டி செப். 7,8,9,10 ஆகிய 4 நாட்கள்  குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்  பாதயாத்திரையாக செல்ல உள்ளார். அந்த  இடங்களை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி ஞாயிறன்று பார்வையிட்டார். ராகுல் காந்தி 12 மாநிலங்கள் வழியாக  150 நாள் பயணமாக இந்த பாதயாத்திரை யை மேற்கொள்கிறார். இதன் தொடக்க விழா நிகழ்ச்சி வருகிற 7 ஆம் தேதி மாலை  3 மணிக்கு கன்னியாகுமரி காந்தி மண்ட பம் முன்பு நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து  கொண்டு ராகுல் காந்தியிடம் தேசிய கொடி யை வழங்கி பாத யாத்திரையை தொடங்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து கன்னியா குமரி கடற்கரை பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணு மின் நிலையத்தில்  தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆய்வு

திருநெல்வேலி, செப்.4- கூடங்குளம் அணுமின் நிலையத்தில் செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடு கள் குறித்து தேசிய பேரிடர்  மேலாண்மை ஆணையத்தி னர் ஆய்வு மேற்கொண்டனர்.  கூடங்குளம் அணுமின்  நிலையம் நெல்லை மாவட் டம் கூடங்குளத்தில் தலா ஆயி  ரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும் 4 அணு உலைகளுக்கு கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த நிலையில்  கூடங்குளம் அணுமின் நிலை யத்தில் செய்யப்பட்டுள்ள பாது  காப்பு ஏற்பாடுகள், ஒத்திகை கள் குறித்து ஆய்வு செய்வ தற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சனிக்கிழமை கூடங்குளம் அணுமின் நிலை யத்திற்கு வந்தனர்.  தேசிய பேரிடர் மேலா ண்மை ஆணைய செயலா ளர் கமல் கிஷோர், உறுப்பி னர்கள் ராஜேந்திர சிங், எஸ். கே.கோஸ், தேசிய பேரிடர்  மீட்பு குழு டி.ஐ.ஜி. மோஷன் சகடி, துணை கமாண்டன்ட்  பிரவீன் பிரசாத், இந்திய அணுசக்தி கழக நிர்வாக இயக்குனர் கே.கே.டி. ஆகி யோர் கொண்ட குழுவினர் அணுமின் நிலையத்தில்  ஆய்வு மேற்கொண்டனர். அவர்  கள் அணு உலை அமைந்த பகுதி மற்றும் முக்கிய இடங்  களில் செய்யப்பட்டு உள்ள  பாதுகாப்பு, ஒத்திகை ஏற் பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  தொடர்ந்து கூடங்குளத்தில் ஆய்வு கூட்  டம் நடந்தது. இதில் அணு மின் நிலைய வளாக இயக்கு னர் பிரேம்குமார், கூடங்  குளம் அணுமின் நிலையத் தில் அவசர காலங்களில் செய்யப்பட்டு வரும் பாது காப்பு நடவடிக்கைகள் குறித்  தும், ஒத்திகை குறித்தும் குழு வினருக்கு விளக்கம் அளித் தார். இதில் சேரன்மாதேவி உதவி கலெக்டர் ரிஷாப்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சிஐடியு மாநில மாநாடு குலசேகரத்தில் வரவேற்புக்குழு அமைப்பு

நாகர்கோவில், செப்.4- இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு வின் 15 வது தமிழ் மாநில மாநாடு நவம்பர்  4, 5, 6 தேதிகளில் கன்னியகுமரியில்  நடை பெறுகிறது. மாநாட்டை வெற்றிகர மாக்கிடும் வகையில் மாவட்டம் முழு வதும் வரவேற்புக்குழுக்கள் அமைப்பது உட்பட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றன. தோட்டம், முந்திரி தொழிலாளர்கள் அதிகம் உள்ள குலசேகரம் பகுதியில் மாநாட்டுப் பணிகளை முன்னெடுத்துச் செல்  லும் வகையில் வரவேற்புக்குழு அமைப்  புக் கூட்டம் குலசேகரம் சிஐடியு அலுவல கத்தில் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட உதவி செயலாளர் எஸ்.சி.ஸ்டாலின்தாஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கே. தங்கமோகனன், வட்ட தலைவர் பி. சிங்காரன் ஆகியோர் மாநாட்டு பணிகள் குறித்து பேசினார்கள். வரவேற்ப்புக்குழு தலைவராக பி. விஸ்வம்பரன்,  செயலாளராக பி.நட ராஜன் மற்றும் அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகளை உள்ளடக்கிய 51. பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்ய பட்டது. கூட்டத்தில் கே.செல்வராஜ், பி.சி..உம்மன் (வி.ச) மீனா றோசிலி (மாதர் சங்கம்)  தங்கம் ராமச்சந்திரன், சுகுமாரி (தையல் சங்கம்) ஜே.கே. பால்ராஜ் (ஜெனரல்) லாசர்  சஞ்ஞய் பிரதீபன் (உள்ளாட்சி)சசிதரன் கபிரியேல், மனோகரன் சேகர், மலுக் முகமது (தோட்டம்)ஜே.ஜூடஸ்குமார் (தேன்)நாணுக்குட்டன், ஸ்ரீகுமார் சந்திரன் (வி.தொ.ச)உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

;