பட்டுக்கோட்டை, ஜூன் 17- மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 95 ஆவது பிறந்த நாள் விழா, 43-ஆவது கலை இலக்கிய இரவு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலை ஞர்கள் சங்கம் சார்பில் பட்டுக் கோட்டையில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. மாநில துணைப் பொதுச் செயலாளர் கவிஞர் களப்பிரன் கலை இரவைத் துவக்கி வைத்தார். மக்கள் கவிஞர் வழியில் என்ற தலைப்பில், திரைக்கலைஞர் ரோகிணி பேசினார். அவர் பேசிய தாவது: பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல் வரிகளின் மூலம் புகழின் உச்சிக்கு வந்தவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். தனக்கு பக்கபலமாக மக்கள் கவிஞரை எம்ஜிஆர் வைத்துக் கொண்டார். உழைக்கும் வர்க்கத்தினர் படும் பாடுகளை தன்னுடைய பாடல் வரிகள் மூலம் எழுதி, அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம். தேர்தலில் நாம் வெற்றி பெற்றி ருக்கிறோம், தோல்வி அடைய வில்லை. தமிழ்நாட்டில் பெற்ற வெற்றியை இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். அவர்கள், நாம் தோல்வி அடைந்த தாக கூறிக் கொண்டே இருப் பார்கள். அவர்களுக்கு நாம் அச்ச மூட்டியிருக்கிறோம். மக்களிடம் உரையாடிக் கொண்டே இருக்க வேண்டும். தமிழ்நாடு சாதித்து காட்டிய வெற்றியை இன்னொரு முறை இந்திய மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். ஒரு வெற்றி தான், ஆனால் நாடே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு நாம் செய்தி ருக்கிறோம். இதற்காக தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உழைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களின் சிந்தனை யில் முற்போக்காளர்கள், முற்போக்கு சிந்தனையை விதைத்துள்ளார்கள். அதற்காக மக்களிடம் தலைவர்கள் பல கால மாக உரையாடிக் கொண்டே இருக் கிறார்கள். மக்களின் சிந்தனையில் முற்போக்கு எண்ணங்கள் வளரத் தொடங்கி இருக்கிறது. கதையின் வழியாக, பாடலின் வழியாக, சினிமாவின் வழியாக, மக்களிடம் மாற்றங்களை ஏற்படுத்தும் எண்ணங்களை பேசிக் கொண்டே இருக்கிறார்கள். பட்டுக்கோட்டையார் பிறந்த மண்ணில் அவர் பணியாற்றிய துறை யில் நானும் பணியாற்றுகிறேன் என்ற பெருமிதத்தோடு, நமக்கு வழிகாட்டும் தலைவர்களின் நோக்கங்களை, லட்சியங்களை தோளில் சுமந்து, நம்மை நாமே பாராட்டிக் கொண்டு அநீதிக்கு எதிராக இந்தியா முழுமைக்கும் கலை இலக்கிய எழுத்து வடி வங்களை கொண்டு சேர்ப்போம். இவ்வாறு அவர் பேசினார். தமுஎகச மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பேசினர். விழாவில் சமூக சேவகர் எஸ்.அருள் சூசை, உடல் தானம் செய்த மருத்துவர் ச.பாலகிருஷ்ணன் மகன் மருத்துவர் பா.சதாசிவம், புற்றுநோயாளிகளுக்கு முடி தானம் செய்து வரும் செய்தி யாளர் தயாநிதி, 108 வாகன ஓட்டு நர் சுரேஷ் ஆகியோர் பாராட்டப் பட்டனர். பட்டுக்கோட்டை கிளையின் சார்பில், “ஒற்றைச் செருப்புகள்” சிறுகதை தொகுப்பு இரண்டாவது பதிப்பு வெளியீடு நடைபெற்றது. எழுத்தாளர் சுமித்ரா சத்தியமூர்த்தி எழுதிய பயணம், எழுத்தாளர் பிரதிபா சந்திரமோகன் எழுதிய இந்திர நீலமும் இமைக்கா இரவுகளும் நூல் அறிமுகம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தி.தனபால் தலைமை வகித்தார். பாரதி புத்தகாலயம் முகமது சிராஜுதீன் நூலை வெளியிட்டார். மண்ணின் புதிய எழுத்தாளர் களின் எழுத்துக்களை அறிமுகம் செய்தும், நூலை பெற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநிலத் தலைவர் கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம் சிறப்புரை ஆற்றினார்.