districts

img

தூய்மைப் பணியாளர் குடும்பத்திற்கு அரசு வேலை, நிவாரணம் கேட்டு மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

திருநெல்வேலி, டிச. 7- பாளையங்கோட்டையில் மாடு எட்டி உதைத்து பலியான துப்புரவு தொழிலாளி குடும்பத்திற்கு அரசு வேலை மற்றும் ரூ.25 லட்சம் நிவார ணம் கேட்டு நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை சிஐடி ஊரக உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் முற்றுகை போராட்டம் நடத்தியது. நெல்லை மாநகராட்சி அலுவலக த்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.மோகன், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் எம்.சுட லைராஜ் ,ஊரக உள்ளாட்சி துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மாரியப்பன் மாவட்ட பொருளாளர் செல்லத்துரை, சிபிஎம் நெல்லை தாலுகா செயலாளர் நாராயணன் மற்றும் 300க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் செவ்வாய்கிழமை யன்று திரண்டனர் தொடர்ந்து மாநக ராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டனர்.

அதனை தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் விஷ்ணு சந்திரன் போராட் டம் நடத்தியவர்களை பேச்சுவார்த்தை க்கு அழைத்தார்.சிஐடியு மாவட்ட செயலாளர் மோகன் மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார். அதில் திரு நெல்வேலி மாநகராட்சி பாளையங் கோட்டை மண்டலம் 13வது வார்டு அம்பேத்கர் சுய உதவி குழு மூலம் பணிசெய்த தூய்மை தொழிலாளி மாரிமுத்துவை மாநகராட்சி நிர்வாகம் மாடு பிடிப்பதற்காக அனுப்பியதின் காரணமாக அவர் மாடு பிடிக்கும் போது மாடு அவரை எட்டி உதைத்து நெஞ்சில் பகுதியில் இதயத்தில் கடு மையாக அடிபட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட தொழிலாளி  மாரிமுத்து சிகிச்சை பலனளிக்காமல்  மரணம் அடைந்து விட்டார். 

மாநகராட்சியில் தொழிலாளர்கள் துப்புரவு பணி செய்வதற்கு மட்டுமே சேர்க்கப்படுகிறார்கள். ஆனால் அவர்களை மாடு பிடிப்பதற்கு அனுப்பு வது என்பது சட்டத்துக்கு புறம்பானதா கும். மாடு பிடிப்பதில் பழக்கம் உள்ள நபர்களை  பயன்படுத்த வேண்டும். மாடு பிடிப்பதற்கு இந்த தொழிலா ளர்களை பயன்படுத்தியதின் காரண மாக பல தொழிலாளர்கள் படுகாய மடைந்து இருக்கிறார்கள். கடந்த காலங்களில் இந்த ஊழியர்களை மாடு பிடிப்பதற்கு பயன்படுத்தக் கூடாது என்று எங்கள் சங்கத்தின் சார்பாக தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம் ஆனாலும் மீண்டும் மீண்டும் இந்த தொழிலாளர்களையே மாடு பிடிப்பதற்கு பயன்படுத்து கிறார் கள். இதன் காரணமாகத்தான் இன்று தொழிலாளி மாரிமுத்து மரணம டைந்து விட்டார் .தற்போது அவ ருடைய குடும்பம் நிர்கதியாக இருக்கி றது. அவருக்கு மனைவியும் 2 பெண்  குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தை யும் உள்ளனர். அவரின் குடும்பத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மாநகராட்சியை சார்ந்தது.  எனவே அவருடைய குடும்பத்தி ற்கு மாநகராட்சி ரூ25 லட்சம் நிவாரண மும் அவருடைய வாரிசுக்கு மாநக ராட்சியில் நிரந்தரத் தன்மையுள்ள வேலையும் வழங்க வேண்டும் என்று எங்கள் சங்கத்தின் சார்பாக வேண்டுகிறோம் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் மாடு பிடிக்கும் போது இறந்த மாரிமுத்துவின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங் கப்படும் .உரிய நிவாரணம் வழங்கப் படும். இதுகுறித்து அரசிடம் எடுத்து ரைப்போம் என பேச்சுவார்த்தையில் மாநகராட்சி ஆணையர் தெரிவித்த தால் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது

;