districts

ஆண்டிபட்டியில் போலியாக ஊதியப் பட்டியல் தயாரித்து ரூ.57 லட்சம் மோசடி செய்த துப்புரவு ஆய்வாளர், அதிகாரிகள்

தேனி, டிச.10- ஆண்டிபட்டி பேரூராட்சியில் போலியாக ஊதியப் பட்டியல் தயாரித்து ரூ.57 லட்சம் மோசடி செய்த புகாரில் துப்புரவு ஆய்வா ளராக பணிபுரிந்த முருகானந்தம் மற்றும் இதற்கு துணைபோன பேரூ ராட்சி செயல் அலுவலர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தேனி ஆட்சி யர், மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் ஆகியோரிடம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.தயாளன், ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் எஸ்.மீனாட்சிசுந்தரம் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகி யோரிடம் மனு அளித்தனர்.  அந்த மனுவில் தெரிவித்துள்ள தாவது: ஆண்டிபட்டி பேரூராட்சியில் ஆண்டிபட்டி துப்புரவு பணியாளர்கள் நலச்சங்கம் 142/11 என்ற சுய உத விக்குழு மூலம் துப்புரவு பணி, குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பணிகளுக்கு 78 பணியாளர்களை நியமித்துள்ளது. பணியாளர்களுக்கு பணிபுரிந்த நாட்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனு மதித்த கூலித் தொகையை வழங்கி வந்தனர்.

ஆண்டிபட்டி பேரூராட்சியில் துப்புரவு ஆய்வாளராக பணிபுரிந்த ஆ. முருகானந்தம், துப்புரவு பணியாளர் நல சங்கம் தயாரித்தது போல் போலி யாக ஊதியப் பட்டியல் தயாரித்து, பேரூராட்சி செயல் அலுவலர்களுடன் கூட்டுச் சதி செய்து பேரூராட்சி நிதியை கையாடல் செய்துள்ளார்.  இதுகுறித்து உள்ளாட்சி நிதி தணிக்கை துறை இணை இயக்குநர் கடிதம் அனுப்பியுள்ளார். இதில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2021 ஜூலை மாதம் வரை ஆண்டிபட்டி பேரூராட்சி கணக்குகளை முழுமை யாக தணிக்கை செய்ததில் நிதி முறை கேடுகள், கையாடல்கள் கண்டுபிடிக் பப்பட்டுள்ளது. இதன்முலம் பேரூ ராட்சிக்கு ஏற்பட்டுள்ள மொத்த நிதி இழப்பு ரூ.57 லட்சத்து 81 ஆயிரத்து 506 ஆகும்.

மஸ்டர் ரோலில் பெயர் இல்லாத பணியாளர்களுக்கு கூலி வழங்கப் பட்டுள்ளது. சுய உதவிக்குழு மூலம் 78 பணியாளர்கள் பணி அமர்த்தப் படவில்லை. சுகாதார ஆய்வாளர், சுகாதார கண்காணிப்பாளர், செயல் அலுவலர்கள் ஆகியோர் போலியாக ஊதியப் பட்டியல் தயாரித்து கையாடல் செய்ததாக தணிக்கை அறிக்கை தெளிவாக கூறுகிறது. உதாரணமாக 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2021 ஆண்டு ஜூலை வரை பேரூராட்சியிலிருந்து சுய உத விக் குழுவிற்கு வழங்கிய தொகை ரூ.21,33,12,676. பணியாளர்களுக்கு அலுவலர்கள் ரூ.1,61,44,933 மட்டுமே வழங்கியுள்ளனர். இதில் மட்டும் ரூ.51 லட்சம் வரை கையாடல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மக்காத குப்பைகள் விற்பனை, குப்பைக் கழிவுகள் மூலம் உரம் தயாரிக்கப்பட்டதாக சான்று வழங்கி அதன் வரவுகளை அரசுக்கு சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் செலுத்தவில்லை. சுமார் ரூ.57 லட்சம் வரை நிதி இழப்பிற்கு காரணமான துப்புரவு ஆய்வாளர் ஆ.முருகானந்தம், செயல் அலுவலர்களாக பணிபுரிந்த கா.பால சுப்பிரமணியன், கோ.சுப்பிரமணியன், இளவரசன் ஆகியோரிடமிருந்து பேரூராட்சிக்கு ஏற்பட்டுள்ள இழப்பு தொகை ரூ.57 லட்சத்தை மீட்டு பேரூ ராட்சி கணக்கில் வரவு வைக்க வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்ட அலுவலர்கள் மீது குற்றவியல் சட்டப்படி வழக்கு பதிவு செய்து, அவர்களின் வங்கி கணக்கு, சொத்துக் களை முடக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித் துள்ளனர்.

;