districts

img

மதுரை தமுக்கம் கலையரங்கை இன்று முதல்வர் திறந்து வைக்கிறார்

மதுரை, செப்.7-  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை தமுக்கம்  மைதானத்தில் ரூ.47.72 கோடி மதிப்பில் நவீன வசதிகளு டன் விரிவாக்கம் செய்யப்பட்ட கலையரங்கத்தை செப்டம்பர் 8 அன்று நடைபெறும் விழாவில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். கீழ் தளத்தில் 240 நான்கு சக்கர வாகனங்கள், 215 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையிலும், மேலும் தொழில் மற்றும் வர்த்தக ரீதியாக பொருட்காட்சி நடத்தும் வகையிலும் சுமார் 3500 நபர்கள் பங்கு பெறும் வகை யில் நவீன வசதிகளுடன் அரங்கமும், சுமார் 800 நபர்கள்  ஒரே நேரத்தில் அமர்ந்து உணவருந்தும் வகையில் உண வகக்கூடமும் இதர அடிப்படை வசதிகளுக்கான இறுதி கட்ட கட்டுமானப் பணிகள் 90 சதவீதம் முடிவுற்றன. இந்நிலையில் வியாழனன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கின்றார்.

;