சிவகங்கை, செப்.21- விருதுநகரில் நடை பெற்ற திமுக முப்பெரும் விழாவில் சிவகங்கை திமுக நகர் செயலாளரும் சிவ கங்கை நகர்மன்ற தலைவ ருமான துரைஆனந்த்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் விருதும்,ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசு பாராட் டினார். சிவகங்கை நகர்மன்ற தலைவராக துரை ஆனந்த் பொறுப்பேற்ற பின்பு தமி ழகத்திலேயே முதன் முத லாக புதிய திட்டத்தை செயல் படுத்தினார். அதாவது பிறப்பு இறப்பு பதிவு செய்த வர்களுக்கு வீடுதேடி சான் றிதழ் அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தியது தமிழ கத்திற்கே வழிகாட்டும் திட்ட மாகும்.மேலும் கடந்த பத்து ஆண்டுகளாக சீர்குலைந்த நிர்வாகத்தை மேம்படுத்து கின்ற பணியை செயல்படுத்தி வருகிறார்.