விருதுநகர், ஜூலை 9- இந்திய நாடு முழுவதும் விவரிக்க முடியாத அளவிற்கு பாஜக எதிர்ப்பு அலை ஏற்பட்டுள்ளது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்தார். விருதுநகரில் திருமண விழாவில் கலந்து கொண்ட காதர் மொகிதீன் செய்தியாளர்களுக்கு பேட்டிய ளித்தார். அப்போது பொது சிவில் சட் டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடு படுவீர்களா என்ற கேள்விக்கு? அவர் பதிலளிக்கையில், பொது சிவில் சட் டம் மூலம் நாட்டில் குழப்பத்தை ஏற் படுத்த பாஜக முயல்கிறது. அச்சட்டத் தின் சரத்துக்கள் எங்களை நேரடியாக பாதிப்புகளை ஏற்படுத்துமெனில் எதிர்ப்பதோடு மட்டுமல்லாமல் அதை இல்லாமல் ஆக்குவதற்கான எல்லா முயற்சியையும் செய்வோம் என்றார். 2024 தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என வட மாநில கருத் துக்கணிப்புகள் கூறுவது குறித்த கேள்விக்கு, கர்நாடகாவில் பாஜக வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு கூறியது. ஆனால் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது, நாடு முழுவதும் விவரிக்க முடியாத அளவிற்கு பாஜக எதிர்ப்பு அலை நிலவுகிறது என்பது தான் உண்மை. விலைவாசி உயர்வு, வேலை யில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் போன்ற பிரச்சனைகள் உள்ளன. மேலும் பாஜகவின் அறிவிப்புகள் அனைத்தும் நாட்டில் பெரும் கொந்த ளிப்பை ஏற்படுத்தி வருகிறது என்றார். விலைவாசி உயர்வு குறித்த கேள்விக்கு? தக்காளி வெங்காயம் போன்றவற்றின் விலை ஏற்றத்திற்கு ஒன்றிய அரசுதான் காரணம். தமிழ கத்திற்கு வரும் தக்காளி மற்றும் வெங் காயத்தை ஒன்றிய அரசு தடுத்து வைத்துள்ளது என்றார்.