இராஜபாளையம், செப்.5- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் என்.ஏ. அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப் பள்ளியில் ஆசி ரியர் தின விழா கொண்டாடப் பட்டது. விழாவிற்கு ரோட்டரி கிளப் கிங் சிட்டி திட்ட குழு தலைவர் கோதண்ட ராம ராஜா தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரி யர் முனைவர் ரமேஷ் வர வேற்றார். வல்லார் சீரியல் விருது பெற்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர் ரமேஷ் பொன்னாடை அணிவித்து பாராட்டப்பட்டார். மேலும் பள்ளியில் பணியாற்றும் 60 ஆசிரியர்களுக்கும், ஆசி ரியைகளும் பொன்னாடை அணிவித்து பாராட்டப்பட்ட னர். விழாவில் ரோட்டரி கிங்ஸ் சிட்டி தலைவர் குமார் ராஜா, செயலாளர் வியாஸ், சிவக் குமார், தேவி, பாலா, செல்வ அழகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.