districts

img

டி-20 உலகக்கோப்பை - ஸ்பெஷல் பாகிஸ்தான் அணி எப்படி?

2009-ஆம் ஆண்டு கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணி அதன் பின்பு டி-20 உலகக்கோப்பையில் பெரியளவு சோபிக்கவில்லை. சூதாட்டம் காரணமாக முக்கிய வீரர்களை இழந்தது, பார்ம் பிரச்சனை, சொந்த மண்ணில் கிரிக்கெட் விளையாடாத சூழல் என பல விஷயங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் உலகை புரட்டியெடுத்தது. 10 ஆண்டுகள் கடுமையான போராட்டத்திற்கு பிறகு கேப்டன் பாபர் அசாமின் துடிப்பான கேப்டன்ஷிப் மற்றும் சூப்பர் பார்மில் இளம் வீரர்களின் அசத்தலான செயல்பட்டால் மீண்டும் கிரிக்கெட் உலகின் அபாயகரமான அணியாக வளர்ந்து விட்டது பாகிஸ்தான்.  இந்நிலையில் வரவிருக்கும் 8-வது சீசன் உலகக்கோப்பை டி-20 தொடரில் எதிர்பார்த்தது போலவே அளவிற்கு மிரட்டலாகவே களமிறங்குகிறது பாகிஸ்தான். அணியில் இது குறை, அது குறை என எதுவும் கூற முடியாத அளவிற்கு பேட்டிங் பிரிவில் 10 பேர், பந்துவீச்சில் 9 பேர் (ஆல்ரவுண்டர் சேர்த்து) என கோப்பையை கைப்பற்றும் அளவிற்கு மிகவும் பலமாகவே உள்ளது. மேலும் ஆசியக்கோப்பை, இங்கிலாந்து தொடர் என இரண்டிலும் போதுமான அளவு வெற்றியை குவித்த தெம்பில் களமிறங்கும் பாகிஸ்தான் அணியில் நட்சத்திர பந்துவீச்சாளர் ஷஹீன் அப்ரிடி அணியில் இணைந்திருப்பது கூடுதல் பலமாகும்.  தற்போதைய நிலையில் பாகிஸ்தான் அணிக்கு பார்ம் பிரச்சனை என எவ்வித பாதிப்பும் இல்லை. ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் பாகிஸ்தான் வீரர்களுக்கு பிடித்தமான மைதானம் என்பதால் அங்கு நன்றாக விளையாடக்கூடியவர்கள். மேலும் அணியில் இருப்பவர்கள் 80% பேர் இளம் வீரர்கள் என்பதால் இளங்கன்று பயம் அறியாது என்ற சொற்றொடருக்கு ஏற்ப மிரட்டலான ஆட்டத்தின் மூலம் 8-வது சீசன் உலகக்கோப்பை கைப்பற்றும் வாய்ப்பும் பாகிஸ்தானுக்கு பிரகாசமாக உள்ளது. 

வீரர்கள் விபரம்

கேப்டன் : பாபர் அசாம் (பேட்டிங்)
பேட்டிங் : ஹைதர் அலி, ஆசிஃப் அலி, குஷ்தில் ஷா, ஷான் மசூத்
ஆல்ரவுண்டர் : ஷதாப் கான், முகமது நவாஸ், இப்திகார் அகமது, முகமது வசீம்
விக்கெட் கீப்பர் : முகமது ரிஸ்வான் - ஒரே ஒரு நபர் மட்டுமே 
(மாற்று கீப்பர் அணியில் இருந்தும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை)
பந்துவீச்சு : ஹரிஸ் ரவுஃப், முகமது ஹஸ்னாயின், நஷிம் ஷா, ஷகீன்  ஆஃப்ரிடி, உஸ்மான் காதிர்
மாற்று வீரர்கள் : ஃபக்கர் ஷமான், முகமது ஹாரிஸ், ஷாநவாஸ் தஹானி